பிப்ரவரி 02, பிரயாக்ராஜ் (Uttar Pradesh News): உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் மாவட்டம், ஜோனிகா காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இளம் தம்பதிக்கு திருமணம் நடைபெற பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
திருமணத்தை நிறுத்திய மணமகன்: இந்நிலையில், வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்த மணமகன், பெண் வீட்டார் தங்களது குடும்பத்தினரை சரிவர வரவேற்கவில்லை என்று கூறி திருமணத்தை நிறுத்த முறையிட்டுள்ளார். மேலும், அங்கிருந்து தனது தாஹுல்லி கிராமத்தில் உள்ள வீட்டிற்கும் புறப்பட்டு சென்றுள்ளார். Actress Died Cervical Caner: பிரபல இளம் நடிகை பூனம் பாண்டே கருப்பை புற்றுநோயால் காலமானார்; அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
காவல் தெய்வங்களால் ஏற்றிவைக்கப்பட்ட மண விளக்கு: இதனைக்கேட்டு கொதித்துப்போன பெண் தரப்பு உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளது. தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி, வீட்டிற்கு சென்ற மணமகனை தேடிக் கண்டறிந்து மீண்டும் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்து வெற்றிகரமாக திருமணத்தை நடத்தினர்.
அறிவுறுத்தி சென்ற அதிகாரிகள்: தனது மகளின் திருமணத்தை பாதுகாப்பாக நடத்திய காவல்துறையினருக்கு பெண்ணின் தந்தை கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். மேலும், பெண்ணுடன் உரிய முறையில் நல்வாழ்க்கை நடத்த வேண்டும் எனவும் மணமகனுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கி சென்றனர்.