Sexual Abuse | Harassment Representational Picture (Photo Credit: Pixabay)

மார்ச் 01, கான்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் மாவட்டம், கதம்பூர், பரவுலி கிராமப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் செங்கல்சூளை அருகேயுள்ள மரத்தில், 2 சிறுமிகளான அக்கா-தங்கை தூக்கில் சடலமாக தொங்கினார். இந்த விஷயம் (Kanpur Girls Abused by Brick Klin Owner) குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து சிறுமிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், சிறுமிகளின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டல்: விசாரணையில், சகோதரிகளான சிறுமிகள் இருவரின் தந்தையும், சம்பந்தப்பட்ட செங்கல் சூளையில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். அங்கு இருக்கும் குளியலறையில், சிறுமிகள் குளித்து வந்துள்ளனர். சம்பவத்தன்று சகோதரிகள் குளித்துக்கொண்டு இருந்தபோது, அதனை செங்கல் சூளை உரிமையாளர் மற்றும் அவரின் மகன் வீடியோ எடுத்து இருக்கின்றனர். Painters Died by Electrocution: மின்சார கம்பிகள் இருப்பது தெரியாமல் நடந்த சோகம்; 2 பெயிண்டர்கள் உடல் கருகி பலி.! 

கூட்டுப்பாலியல் பலாத்காரம்: பின் அந்த வீடியோவை சிறுமிகளிடம் காண்பித்து, அவர்களை தங்களின் ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளார். மேலும், தங்களின் ஆசைக்கு இணங்க மறுத்தால் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவும், குடும்பத்தை கொலை செய்திடுவோம் எனவும் மிரட்டி இருக்கின்றனர். கயவர்கள் இருவராலும் சகோதரிகளான சிறுமிகள் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

மூவர் கும்பல் கைது: இவ்வாறான செயல் தொடர்ந்து வந்த நிலையில், ஒருகட்டத்தில் வாழ்க்கையின் மீது விரக்தியடைந்த சகோதரிகள் தூக்கிட்டு தங்களின் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர் என்பது உறுதியானது. விசாரணையை தொடர்ந்து அதிகாரிகள் செங்கல்சூளையின் உரிமையாளர் ராம்ரூப் நிஷாத் (வயது 48), அவரின் மகன் ராஜி (வயது 18), உறவினர் சஞ்சய் (வயது 19) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள் மூவரும் கூட்டுசேர்ந்து இக்கொடூரத்தை அரங்கேற்றி இருக்கின்றனர்.

குற்றம் உறுதி: இவர்களின் மீது போக்ஸோ உட்பட பல்வேறு சட்டங்கள் பாய்ச்சப்பட்டுள்ளன. குழந்தையை இழந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நியாயம் கேட்டு அதிகாரிகளிடம் கதறியழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது. கைதானவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் செல்போனை சோதனை செய்தபோது சிறுமிகளின் வீடியோவும் மற்றும் புகைப்படமும் இருந்துள்ளது.

உயிரிழந்த சிறுமிகள் இருவரும் செங்கல் சூளை உரிமையாளருக்கு தூரத்து உறவினர்கள் ஆவார்கள்.