மார்ச் 01, தி நகர் (Chennai News): சென்னையில் உள்ள தியாகராஜ நகர், ராஜமன்னார் தெருவில், சாய் அடுக்குமாடிகுடியிருப்பு வளாகம் இருக்கிறது. இந்த குடியிருப்பு வளாகத்தில் வர்ணம்பூசும் வேலை நடைபெற்று வந்ததாக தெரியவருகிறது. இந்த பணியில் 2 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.
மின்கம்பி உரசி சோகம்: இந்நிலையில், நேற்று வேலையில் ஈடுபட்டு இருந்த பணியாளர்கள், சுமார் 25 அடி உயரமுள்ள அலுமினிய ஏணியை தள்ளிக்கொண்டு வந்துள்ளனர். மேலே செல்லும் மின்சார கம்பிகளை அவர்கள் கவனிக்காமல் இருந்ததாக தெரியவருகிறது. ஏணி மின்சார கம்பிகளுடன் எதிர்பாராத விதமாக உரசி இருக்கிறது. Fisker Layoff: 15% பணியாளர்களை பணிநீக்கம் செய்கிறது மின்சார கார் தயாரிப்பு நிறுவனம்; ஊழியர்கள் அதிர்ச்சி.!
உடல் கருகி பலி: இந்த விபத்தில் ஏணியை தள்ளிக்கொண்டு வந்த இரண்டு தொழிலாளர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. மின்சாரம் பாய்ந்த அடுத்த நொடியே, இருவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த குடியிருப்பு வாசிகள், இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
காவல்துறையினர் விசாரணை: மேலும், மின்வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர், மின்சாரம் தாக்கி பலியான இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடந்து வருகிறது.
பலியான பெயிண்டர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.