டிசம்பர் 20, புனே (Maharashtra News): சர்வதேச அளவில் யூடியூபர்கள் தற்போது வெளிநாடுகளுக்கு தனி நபர்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வீடியோ பதிவு செய்வதை தொடர்ந்து வருகின்றனர். இவ்வாறானவர்கள் சில இடங்களில் பிரச்சனைகளை எதிர்கொள்வதும் உண்டு. இந்தியாவுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த யூடியூபர்கள் சுற்றுலா பயணிகளாக வருகை தந்து இருக்கின்றனர்.
தூதரகங்களில் குவியும் புகார்கள்: இவர்களில் இராஜஸ்தான் மற்றும் மும்பை பகுதியில் சுற்றுலா சென்றவர்கள், சில நேரம் அங்குள்ள நபர்களால் பாலியல் ரீதியான தாக்குதலை எதிர்கொண்டதும் உண்டு. இதுகுறித்து வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் நிலை குறித்து தெரிவித்து, தூதரகத்திலும் புகாரை பதிவு செய்து வருகின்றனர்.
கொரிய யூடியூபர்: இந்நிலையில், கொரியாவை சேர்ந்த பெண் யூடியூபர் ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பகுதியை சுற்றிப்பார்க்க வந்தார். அவர் அங்குள்ள கடைவீதிகளை சுற்றிப்பார்த்தபோது, கடை ஒன்றில் மக்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். அச்சமயம் இளைஞர் ஒருவர் பெண்ணை எதிர்பாராத வகையில் கட்டிப்பிடித்து அங்குள்ளவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். MPs Suspended: மக்களவையில் அமளி… மேலும் 49 எம்.பி.க்கள் இன்று இடைநீக்கம்!
அதிர்ச்சியில் பெண்மணி: இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி அங்கிருந்து சிரித்துக்கொண்டு வெளியேறினாலும், தன்னை அவர் எந்த எண்ணத்தில் கட்டிப்பிடித்தார் என தெரியவில்லை. இங்கிருந்து சென்றுவிட வேண்டும். விரைந்து செல்ல வேண்டும் என்று கூறியபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின.
புனே காவல்துறை விசாரணை: இதனையடுத்து, வீடியோ புனே காவல் துறையினரின் பார்வைக்கும் செல்லவே, விசாரணையில் இறங்கிய அதிகாரிகள் சர்ச்சைக்குரிய செயலில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இந்த தகவலை புனே காவல் துறையினர் தங்களின் எக்ஸ் பக்கத்தில் உறுதி செய்துள்ளனர்.
On camera, Korean vlogger harassed in Pune: 'They really like to hug'
Don't let such people go scot-free. @PuneCityPolice @DGPMaharashtra @MahaPolicepic.twitter.com/WlD4tg1QAK
— Pune City Life (@PuneCityLife) December 19, 2023