மே 26, பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் (Purvanchal University): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜாணுபூரில் (Jaunpur) பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் (Purvanchal University) செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் துறைத்தலைவர், பெண் மாணவியிடம் ஆபாசமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

வீடியோவில் துறைத்தலைவர் மாணவியிடம் முத்தம் கொடுக்குமாறும், இருவரும் உல்லாசமாக இருக்கலாம் என்றும் பாலியல் ரீதியான தொல்லை அளித்து இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பான விடியோவை பாதிக்கப்பட்ட மாணவி காட்சிகளாக பதிவு செய்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். Alibaba Plans To hire 15,000 People: 16 ஆயிரம் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் அலிபாபா நிறுவனம்; மாஸ் அறிவிப்பை வெளியானது..!

இந்த அதிர்ச்சிகரமான வீடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில், உத்திரபிரதேசம் மாநில காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் பேராசிரியர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.