
மார்ச் 14, சூரத் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியில் வசித்து வருபவர் விஸ்பி காரடி (Vispy Kharadi). இவரை இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் அழைக்கலாம். எம்.பி.ஏ பயின்றுள்ள விஸ்பி, உடற்பயிற்சி மைய நிபுணராகவும், பல தற்காப்பு கலைகள் பயின்ற நபராகவும் வலம்வருகிறார். மேலும், சாதனைகள் செய்வதில் விருப்பம் கொண்ட விஸ்பி, தற்போது வரை 16 கின்னஸ் (Guinness World Record) உலக சாதனைகளை படைத்தது இருக்கிறார். MGM Amusement Park: கழன்று விழுந்த ராட்சத பெல்.. எம்.ஜி.எம் பார்க்கில் நேர்ந்த பயங்கரம்.. பதறவைக்கும் காணொளி.. 2 மாணவிகள் காயம்.!
2 நிமிடங்கள் தாங்கிப்பிடித்து சாதனை:
இந்நிலையில், சமீபத்தில் அவர் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அதாவது, இரண்டு கைகளிலும் சுமார் 160 கிலோ அளவிலான தூண்களை தாங்கி பிடிக்கும் போட்டியில், அவர் 2 நிமிடங்கள் தூண்களை தாங்கி சாதனை படைத்துள்ளார். அதிக நேரம் தூண்களை தாங்கும் (Longest Duration Holding Hercules Pillars) ஆண்கள் பிரிவில், 160 கிலோ எடையுள்ள தூணை, இரண்டு கைகளிலும் தனித்தனியே நிலைநிறுத்தி, அதனை 2 நிமிடம் 10.75 வினாடிகள் வரை தாக்குபிடித்து சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி இருக்கிறார்.
160 கிலோ தூண்களை தாங்கி சாதனை படைத்த இந்தியன்:
Longest duration holding Hercules pillars (male) 💪⏱️ 2 mins 10.75 seconds by @VispyKharadi 🇮🇳 pic.twitter.com/JxFFSU4xGv
— Guinness World Records (@GWR) March 13, 2025