
மார்ச் 14, முட்டுக்காடு (Chennai News): சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலை, முட்டுக்காடு பகுதியில், எம்.ஜி.எம் அமுயுஸ்மன்ட் பார்க் (MGM Amusement Park) செயல்பட்டு வருகிறது. சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பொழுதுபோக்கு மையமான அமுயுஷ்மன்ட் பார்க்கில், ரோலிங் தண்டர், ரைன்போ கோஸ்டர், ஆம்பிட் தியேட்டர் உட்பட பல விஷயங்கள் இடம்பெற்று இருக்கின்றன. மில்லியன் வரவேற்பாளர்களை பெற்றுள்ள, சென்னை நகரின் பழமையான பார்க்கில் ஒன்றான எம்.ஜி.எம்-ல், வார இறுதி மற்றும் விடுமுறை நாட்கள் மக்கள் வெள்ளத்துடன் களைகட்டும். TN Budget Session: தமிழ்நாடு பட்ஜெட் 2025 - 2026: வெளியான அறிவிப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ.!
2 மாணவிகள் காயம்:
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு எம்.ஜி.எம் சென்ற கல்லூரி மாணவிகள், ராட்சத கப்பலில் அமர்ந்து இருந்தனர். கப்பல் இயங்கும்போது, திடீரென இரும்பு பெல் அமைப்பு ஒன்று விழுந்தது. இதனால் அவர்கள் தலையில் படுகாயம் அடைந்த நிலையில், மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக தற்போது வரை புகார் ஏதும் பெறப்படவில்லை என கூறப்படுகிறது.
ராட்சத இரும்பு கிண்ணம் ஒன்று பெண்கள் மீது விழுந்த காட்சி:
Hi, @tnpoliceoffl
Today @MGM amusement park chennai....
ராட்சச கப்பலில் கல்லூரி மாணவிகள் விளையாண்டு கொண்டு இருந்த போது, அதில் உள்ள இரும்பு கப் ஒன்று அவர்கள் தலையில் விழுந்து இரத்தம் வந்து மருத்துவமனை சென்று ஸ்கேன் செய்து வந்து இருக்கிறார்கள்....
Thread.... pic.twitter.com/DNoKnexfaz
— JAGAN subramaniyan (@Gaajuboyy001) March 13, 2025