கள்ளக்காதலுக்கு இடையூறு.. காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி கைது..!

உத்தர பிரதேசம் மாநிலம் அலிகார்க்கில் (Aligarh Wife Killed Husband) மனைவி தனது காதலனுடன் சேர்ந்து கணவரை வயிற்றில் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதலுக்கு இடையூறு.. காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி கைது..!
Husband Murder Case in Uttar Pradesh (Photo Credit: @TrueStoryUP X)

ஆகஸ்ட் 04, அலிகார் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், அலிகார் (Aligarh) மாவட்டத்தை சேர்ந்த தம்பதி யூசுப் - தபசு. இவர்கள் இருவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், அவரது மனைவி தபசு, டேனிஷ் என்ற வாலிபருடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. தபசும் மற்றும் அவரது காதலன் டேனிஷின் கள்ளத்தொடர்பு விவகாரம் கணவருக்கு தெரியவந்தது. இதனை அவர் பலமுறை கண்டித்து வந்துள்ளார். காதலனுக்கு ஜூஸில் பூச்சிமருந்து கொடுத்து கொலை.. கேரளாவில் மீண்டும் திடுக்கிடும் சம்பவம்.!

கணவர் கொடூர கொலை:

இதனால் அவரது மனைவி மற்றும் காதலன் டேனிஷ் இருவரும் சேர்ந்து அவரைக் கொலை செய்ய சதி செய்தனர். முதலில் அவரது இரண்டு கைகளும் கட்டப்பட்டு, பின்னர் அவரது வயிற்றில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், யூசுப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கொடூரமாகக் கொலை (Murder) செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதன்பின்னர், அவரது மனைவி மற்றும் காதலனை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Aug 04, 2025 03:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).