
மே 11, சென்னை (Chennai News): நாம் தினந்தோறும் உபயோகிக்கும் சமையல் பொருட்களை பிளாஸ்டிக் டப்பாவில் சேமித்து வைக்கும் போது அதில் உள்ள ரசாயனம் இதயநோய் பாதிப்பை ஊக்குவிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு நாளும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நாம் உணவை எடுத்துக் கொள்ளும் நிலையில், நாம் பயன்படுத்தும் பொருட்கள் நமது உயிருக்கு கேடு விளைவிக்கும் வகையில் இருக்கின்றன.
இதய நோய் ஏற்படும் அபாயம் :
நாம் வீட்டில் சமையல் பொருட்களை சேகரிக்க பயன்படுத்தும் பிளாஸ்டிக் டப்பாவில் இதய நோய் பாதிப்பை அதிகப்படுத்தும் 'Phthalates' என்ற ரசாயனம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ரசாயனம் பிளாஸ்டிக் டப்பாவின் தன்மை மற்றும் நீண்ட கால உழைப்புக்காக அதில் சேர்க்கப்படுகிறது. இதில் சமையல் பொருட்களை சேகரித்து பின் அதனை பயன்படுத்தும் போது, ரசாயனங்கள் நமது உணவுப் பொருட்களில் கலந்து இதய நோய் பாதிப்பை அதிகரித்து மரணத்துக்கும் வழிவகை செய்கிறது. Health Tips: நாளொன்றுக்கு 15 டீ, காபி குடிக்கிறீங்களா? முக்கிய தகவல் இங்கே.!
இனப்பெருக்க மண்டல பாதிப்பு :
அதேபோல ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தை பாதித்து டெஸ்டோஸ்டிரோனை சீர்குலைத்து விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. இதனால் குழந்தைப்பேறு என்பது கேள்விக்குறியாகிறது. இந்த காலகட்டத்தில் அன்றாடம் நாம் பிளாஸ்டிக் கலந்த ஏதாவது ஒரு பொருளை உபயோகிக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் உடற்பருமன், ஆஸ்துமா, கேன்சர் உள்ளிட்ட பல உடல்நல கோளாறுகளையும் சந்திக்க நேரிடுகிறது.
மருத்துவ வல்லுநர்கள் கூறுவது :
டிபன் பாக்ஸ், மேக்கப் மற்றும் வாசனை பொருட்கள் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் ஆகிவிட்டது. இதனால் 'Phthalates' ரசாயனம் கலந்த பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதை தவிர்த்து, மரத்தினால் செய்யப்பட்ட பொருள், கண்ணாடி, அலுமினிய பொருட்களை பயன்படுத்தி உடல் நல பிரச்சனைகளை தவிர்க்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.