செப்டம்பர் 02, இலண்டன் (Technology News): ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், அதன் பெயரை X என மாற்றினார். அதன் பல சிறப்பம்சங்களை மாற்றி, பணம் செலுத்துவோருக்கு விதிமுறையும், பணம் செலுத்தாதோருக்கு தனி விதிமுறையும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சூடான் நாட்டை சேர்ந்த ஹேக்கர்கள் குழு, எக்ஸ் தளத்தினை முடக்கி இருக்கின்றனர். சுமார் 2 மணிநேரம் ட்விட்டர் சேவை பல நாடுகளில் இதனால் பாதிக்கப்பட்டது. IND Vs PAK: பாகிஸ்தான் அணிக்கு 267 ரன்கள் டார்கெட் வைத்த இந்தியா; வெற்றி யாருக்கு?.. இலங்கை மண்ணில் இந்தியாவின் ஆட்டம் நிலைக்குமா?..!
12-க்கும் மேற்பட்ட நாடுகளில் ட்விட்டர் செயலி (X) மொத்தமாகவே முடங்கிப்போயின. ட்விட்டரை முடக்கிய ஹேக்கர் குழு, தங்களின் நாட்டில் குறைந்த விலையில் ஸ்டார்லிங்க் இன்டர்நெட் சேவையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளது. இந்த தகவலை ஹேக்கர் குழு டெலகிராமில் பகிர்ந்து இருக்கிறது.
சூடானில் இருந்து ட்விட்டரை முடக்கிய குழுவை சேர்ந்தவர்கள், ரஷிய ஆதரவு கொண்டவர்கள் என்று அமெரிக்கா ஆதரவு பிரச்சாரத்தையும் மேற்குலக நாடுகள் இவ்விவகாரத்தில் முன்னெடுத்து இருக்கிறது.