டிசம்பர், 8: உடற்பயிற்சிக்கு (Exercise) வயது ஒரு பொருட்டல்ல.. துள்ளல் உற்சாகம் கொண்ட இளமை மனது இருந்தால் 80ல் கூட உடற்பயிற்சி சாத்தியம் என்பதை நிரூபணம் செய்ய நம்கண்முன்னே பல நிகழ்வுகள் அரங்கேறி இருக்கின்றன. ஆதலால், 60 வயதில் உடற்பயிற்சி செய்யலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் யாருக்கும் வேண்டாம். அந்த எண்ணம் இருந்தால் அதனை விடுப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
உடற்பயிற்சி நமது உடல் தசைகளை வலுப்படுத்தும், எலும்புகளை பலப்படுத்தும், இரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும், மனநலனும் மேம்படும். இது அனைத்து வயதினருக்கும் பொதுவானது. 60 வயதை கடந்தோர் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் தண்டுவட பிரச்சனை, இடுப்பு மற்றும் மூட்டு பிரச்சனை போன்றவை நீங்கும். வயோதிக காலங்களில் செய்யக்கூடிய உடற்பயிற்சிகள் குறித்து இனி காணலாம்.
காலை உயர்த்துதல் (Standing Leg Lift): இம்முறையில் நாற்காலிக்கு பின்புறம் நின்று, நாற்காலியை இரண்டு கைகளால் பிடித்துக்கொள்ளவும். பின் கால்களை முன்புறம் மடக்கி உயர்த்தலாம். இதே வேளையில் கைகளை மெதுவாக பின்புறம் வீசலாம். இடத்துக்கு இடதுகை, வலதுகாலுக்கு வலதுகை என்று ஒருசேர இப்பயிற்சியை சில நிமிடத்திற்கு செய்யலாம். Murungai Keerai Chutney: உடலுக்கு சத்துக்களை வாரி வழங்கும் முருங்கையில், சுவையான துவையல் செய்து சாப்பிடலாம் வாங்க..!
நாற்காலி ஆதரவுடன் உட்காருதல் (The Squat With Chair Support): நாற்காலிக்கு பின்னர் அதனை பற்றிகொண்டவாறு கை-கால் மூட்டுகள் மடங்க உட்கார்ந்து எழுதல் ஆங்கிலத்தில் Squat With Chair Support என்று அழைக்கப்படுகிறது. இம்முறையில் கை மூட்டுகள் பின்புறம் வலையுமாறும், கால் மூட்டுகள் முன்புறம் வளையுமாறும் உட்கார்ந்து எழ வேண்டும். இதில் முக்கியமாக முழுவதும் உட்காராமல் மூட்டுகளை மடக்கினால் போதுமானது.
உயர்த்துங்கள் (Do Lifts): நமது கெண்டைகாலினை மேலே உயர்த்தும் பயிற்சியை நாற்காலியை பிடித்தவாறு நின்று லேசாக கெண்டைகாலினை உயர்த்தலாம். இவ்வாறாக 20 முறை செய்யலாம். இது உடலை சமநிலையோடு சீர்படுத்த உதவும்.
கால்களை உயர்த்துதல் (Back Leg Rises): பின்முதுகு பகுதி, கீழ் முதுகுப்பகுதி போன்றவை வலுப்பெற இவ்வுடற்பயிற்சி உதவி செய்யும். முதலில் நாற்காலியை பின்புறமாக பற்றிக்கொண்டு, நமது மூட்டினை மடக்காமல் கால்களை மெதுவாக பின்புறம் உயர்த்தி கால்களை வினாடி நிறுத்தி வைத்து, மெதுவாக கீழே இறக்க வேண்டும். இவ்வாறாக 15 முறை இரண்டு கால்களாலும் செய்யலாம்.
இறுதியாக நாற்காலியில் அமர்ந்து வலப்புற கைகளை நாற்காலிக்கு பின்னர் வைத்துக்கொண்டு, இடப்புற கைகளை கொண்டு வலப்புற கையை பற்றி 10 வினாடிகள் நடந்ததும் இரண்டு கைகளையும் மெதுவாக இயல்பு நிலைக்கு கொண்டு வரவேண்டும்.