டிசம்பர், 11: குழந்தைகளை பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் (Breast Feeding) நன்றாக சுரக்க அம்மான் பச்சரிசி கீரை (Asthma-plant/Euphorbia hirta) உதவி செய்கிறது. இக்கீரைக்கு சித்திர பாலாடை என்றும் மற்றொரு பெயர் உண்டு. அதற்கு காரணம் அம்மான் பச்சரிசி கீரையை குழந்தைப்பேறு பெற்ற பெண்கள் சாப்பிட்டால் தாய்ப்பால் வற்றாத அருவி போல தொடர்ந்து சுரக்கும்.
துவர்ப்புடன் இனிப்பு சுவை கொண்ட கீரையின் முழு தாவரமும் மருந்து பொருளாக பயன்படுகிறது. இதில், சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரண்டு வகை கீரையும் உள்ளன. கீரையின் விதை தோற்றம் & சுவையில் அரிசி குருணையை போல இருப்பதால் பச்சரிசி கீரை என்றும் அழைக்கப்டுகிறது.
இந்த கீரையின் இலைகள், வேர், பூக்கள் போன்றவை மருத்துவ குணத்தினை கொண்டது. குழந்தைப்பேறு அடைந்த பெண்களுக்கு வழங்கப்படும் கீரை இது மட்டும் தான். இது கிருமிகளை அண்டவிடாமல் உடலை பாதுகாக்கும். இக்கீரையின் இலையை நீரில் கலந்து குடிக்க கொடிய நோய்தொற்று விலகி உடல் நலம்பெறும். December Festivals: இந்தியா முழுவதும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் திருவிழாக்கள் தெரியுமா?.. தமிழ்நாட்டில் முக்கிய திருவிழா..!
அம்மான் பச்சரிசி கீரையின் பூக்களை அரைத்து பசும் பாலுடன் சேர்த்து குடித்தால் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். காலை மற்றும் மாலை வேளைகளில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் உடலுக்கு திடம் கிடைக்கும். இந்த கீரையின் இலைகளை அரைத்து மோருடன் சேர்ந்து குடிக்க பெண்களின் மாதவிடாய் தொந்தரவு, வெள்ளைப்படுதல் போன்றவைகள் நீங்கும்.
பாத வெடிப்பு, உதட்டு வெடிப்பு, நிறமாற்றம், வாய்ப்புண், ஆணிக்கால் போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. காலையில் இளம் சூடுள்ள நீருடன் அம்மான் பச்சரிசி கீரை பூவினை அரைத்து குடித்து வந்தால் துன்றதுடன் வெளியேறும் வெள்ளைப்படுதல் பிரச்சனை சரியாகும்.