Couple Sad / Happy (Photo Credit : Pixabay)

ஜூன் 03, சென்னை (Couple Tips Tamil): திருமணமான தொடக்கத்தில் தம்பதியிடையே இருக்கும் ரொமான்ஸ், ஈர்ப்பு, நெருக்கம் போன்றவை நாளடைவில் படிப்படியாக குறைகிறது. இவ்வாறான நிலைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதாவது தம்பதிகளிடையே பேச்சுவார்த்தை இல்லாதது நெருக்கத்தை வெகுவாக குறைக்கிறது. இருவரும் வெளிப்படையாக பேசும் பட்சத்தில் திருமண உறவு பலப்படும். தகவல் தொழில்நுட்பத்தில் எப்போதும் பேசிக் கொண்டுதானே இருக்கிறோம் என்ற புரிதல் தவறானதாகும். நீங்கள் இருவரும் மனம் விட்டு பேசுவது நல்லது.

வேலைப்பளுவால் உண்டாகும் மன அழுத்தம் :

திருமண உறவில் ஆண்டுகள் கடக்கும் போது ரொமான்ஸ் கொஞ்சம் குறைய தொடங்கும். வேலைப்பளு காரணமாகவும், மன அழுத்தம் காரணமாகவும் இது இருக்கலாம். ஆகையால் எவ்விதமான வேலை அழுத்தம் இருந்தாலும், இருவரும் குறைந்தது ஒரு மணிநேரமாவது ஒதுக்கி செயல்படலாம். திருமணத்திற்கு பின்னர் ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்வதால் அது சலிப்பு, ஆர்வமின்மையை ஏற்படுத்தும். இதனால் திருமணத்தில் இருந்த காதலும் மெல்ல குறையும். Health Tips: உணவில் மறைந்துள்ள மருத்துவம்.. பெற்றோர்களே நோட் பண்ணுங்க.! 

நெருக்கத்தை ஏற்படுத்தும் காதல் :

திருமணமான புதிதில் புதிய முயற்சிகள் கவனிக்கப்பட்டாலும், பின் நாட்களில் விரக்தி, சோர்வு ஏற்படும். இதனை ஈடு செய்ய இருவரும் தங்களது புதிய மாற்றங்களை கையில் எடுக்கலாம். மனம் திறந்து பாராட்டுவதும் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தும். எப்போதும் இருவரும் எதிர்மறை எண்ணத்துடன் இருக்காதீர்கள். இது திருமண உறவை சிதைத்து விடும். ஒருவருக்கொருவர் நேர்மையான அணுகுமுறையுடன் அணுகினால் அன்பும், காதலும் எப்போதும் நிறைந்திருக்கும்.

பிரச்சனைகளை தீர்க்கும் முறை :

காதலை எப்போதும் உயிர்ப்புடன் வைக்க முத்தமிடுதல், கட்டிப்பிடித்தல் நல்லது. ஒருவர் மீது ஒருவர் விரக்தி, வெறுப்பு கொண்டு இருக்காமல் தவறுகளை சுட்டிக்காட்டி நல்வழியில் அழைத்துச் செல்வது நல்லது. தம்பதிகள் தங்களுக்குள் ஏற்படும் பிரச்சனைகளை நீங்களே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். இருவரும் மனம் விட்டு பேசினால் அனைத்து பிரச்சனையும் தீர்ந்து விடும். அதே நேரத்தில் மூன்றாவது நபரை அணுகினால் அது எந்த மாதிரியான மாற்றத்திற்கும் வித்திடும்.