
ஜூன் 02, சென்னை (Health Tips Tamil): ஒவ்வொரு நாளும் நாம் நமது உடலுக்கு தேவையான சத்துக்களை உணவில் இருந்து பெறுவது அவசியமாகிறது. அன்றைய நாளில் செயல்களை திறம்பட செய்து முடிக்க உடலுக்கு முதலில் ஆற்றல் தேவைப்படுகிறது. இந்த ஆற்றல் நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்து நமது உடலுக்கு ஊட்டச்சத்துக்களாக கிடைக்கிறது. அந்த வகையில் சுழற்சி முறையில் நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் நன்மைகள் குறித்த தகவலை இந்த செய்தித்தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.
நெஞ்சு எரிச்சலுக்கு புதினா :
செரிமானத்தை எளிமையாக்கும் மூலிகையான புதினா குமட்டல் பிரச்சனையை சரி செய்யும். புதினா எடுத்துக்கொள்வதன் மூலம் வயிற்று வலி, செரிமான கோளாறு சரியாகும். ஜீரணம் மேம்படும். வயிற்று உப்புசம் சரியாகும். உடலில் அமிலம் சேர்வது குறைக்கப்படும். நெஞ்சு எரிச்சல், தொண்டை எரிச்சல் போன்றவற்றை சரி செய்யும். Cooking Tips: சுவையான முருங்கைக்காய் எண்ணெய் தொக்கு.. இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!
ரத்த சோகைக்கு கறிவேப்பில்லை :
நீரிழிவு நோயால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கறிவேப்பில்லை உதவும். ஆகையால் நீரிழிவு நோயாளிகள் துவையல் போன்ற வடிவிலும் கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்திற்கு காரணமான கருவேப்பிலை குடல் புற்றுநோய் வாய்ப்புகளை குறைக்கும். இரத்த சோகையை சரி செய்யும் குணமும் கருவேப்பிலைக்கு உண்டு.
கண் வீக்கத்துக்கு வெள்ளரிக்காய் :
நமது கண்களில் ஏற்படும் வீக்கம், கண் வலி, கண்கள் சிவப்பாக இருத்தல், எரிச்சல், அரிப்பு போன்றவற்றுக்கு வெள்ளரிக்காய் மிகச்சிறந்த மருந்தாகும். வெள்ளரிக்காயை வட்ட வடிவ துண்டாக வெட்டி கண்ணிமைகளுக்கு மேல் வைத்து சிறிது நேரம் ஓய்வு எடுத்தால் கண்ணுக்கு குளிர்ச்சி ஏற்படும். கண் வீக்கம் குறையும். உடலுக்கும் குளுமை கிடைக்கும்.
வரட்டு இருமலுக்கு இலவங்க பட்டை :
ஆன்ட்டி பாக்டீரியல், ஆன்ட்டி வைரல், ஆன்ட்டி ஆக்சிடென்ட் போன்ற உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சத்துக்களை கொண்ட இலவங்கப்பட்டை வறட்டு இருமலுக்கு மிகப்பெரிய தீர்வை தரும். சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி போன்றவற்றுக்கும் தீர்வு தரும். இலவங்கப்பட்டையை பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிடலாம். மசாலா டீ யில் இலவங்கப்பட்டை சேர்த்து குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.