ஜூலை 21, ஆரோக்கியம் (Health Tips): கொடி இனத்தைச் சார்ந்த அவரைக்காய், தென்னிந்தியாவில் அதிகளவு பயிரிடப்படும் காய்கறிகளில் ஒன்றாகும். அவரை செடியின் இலை, காய் போன்றவை மருத்துவ குணம் உடையவை.
அவரைக்காயில் இருக்கும் புரதம், நார்ச்சத்து, இரும்பு சத்து போன்றவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். உடல் சோர்வை நீக்கி, உடலின் உள்ளுறுப்புகளை சீராக இயங்க வைக்கும். கண் பார்வையை தெளிவாக்க உதவி செய்யும்.
அவரையில் கோழி அவரை, கொத்தவரை, சீனி அவரை, சீமை அவரை, ஆட்டு கொம்பு அவரை என பல வகைகள் இருக்கின்றன. அவரைக்காய் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும். தேவையற்ற கொழுப்பை குறைக்கும்.
கர்ப்பிணி பெண்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை வாரி வழங்கும் அவரைக்காய், கருவில் இருக்கும் குழந்தையின் மூளை மற்றும் முதுகுத்தண்டு சார்ந்த பிரச்சனை ஏற்படாமல் பாதுகாக்கும். Snake Protect Tomato: தக்காளியை பாதுகாக்க வீடுதேடிவந்த நாகராஜன்; பலத்த பாதுகாப்பால் பதறிப்போன குடும்பத்தினர்.!
உடலில் ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யவும், உடல் உள்ளுறுப்புகளை சீராக இயங்க வைக்கவும் அவரை பேருதவி செய்கிறது. அதேபோல, இதில் இருக்கும் புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவை உடல் எடையை குறைக்கவும் உதவி செய்கிறது.
ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்படாமலும் பாதுகாக்கிறது. நல்ல ஞாபக சக்தியை வழங்கி, உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது. இவை நரம்புகளை வலுப்படுத்தும் தன்மை கொண்டது என்பதால், நரம்பு கோளாறுகளை நீக்கும்.
மனரீதியான அழுத்தம், தூக்கம் தொடர்பான பிரச்சனை, பதற்றம், படபடப்பு போன்றவைகளும் சரி செய்யப்படும். அவரை செடியின் இலைகளை சாறாக்கி வெள்ளை துணியில் நனைத்து நெற்றியில் ஒட்டி வைத்தால் தலைவலி சரியாகும்.
அவரை இலை சாறுடன் கற்கண்டு சேர்த்து சிறிதளவு குடித்து வர வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்சனை குணமாகும். பித்தத்தினால் ஏற்பட்டும் கோளாறுகள், கண்கள் சார்ந்த பிரச்சனை சரி செய்ய அவரை உதவுகிறது. செரிமான கோளாறுகளையும் நீக்கும்.
கால்சியம் சத்துக்களை கொண்டுள்ள அவரை எலும்பு, பற்களை உறுதியாக்கும். பிஞ்சு துவரை இரத்த நாளங்களை சுத்தப்படுத்த உதவி செய்கிறது.சர்க்கரை நோயால் ஏற்படும் பல பிரச்சனைகளை அவரை சரிசெய்யும். இதனை கூட்டு, பொரியல், குழம்பு போல சமைத்து சாப்பிடலாம்.