டிசம்பர், 8: பூவுலகில் மனிதர்களின் தோற்றத்திற்கு பலகோடி ஆண்டுகள் முன்பே உயிர்த்தெழுந்த உயிரினம் தேனீக்கள் (Honey Bee). மலரில் இருந்து எடுக்கப்பட்ட தேன் (Honey) என்ற இயற்கையான பொருளை அவை வழங்குகின்றன. ஆகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட தேனை போல, தேனீயின் நஞ்சு மருத்துவ குணங்களை கொண்டது ஆகும்.
முதலில் தேனீ கடித்தும் தீராத வலி உணர்வு ஏற்படும். இந்த வலி உணர்வு அதிகம் இருந்தாலும், அது பல நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. தேனீயின் கொடுக்கில் உள்ள நஞ்சு கீழ்வாத பிரச்சனைகளுக்கு மிகசிறந்த மருந்தாக அமைகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எண்ணற்ற அமிலகங்கள்: பார்மிக் அமிலம், ஆர்தோபாஸ்பரிக் அமிலம், ஹைட்ரோகுளோரிக் அமிலம், ஹிஸ்டமின், டிரிப்டோபான், கந்தகம் போன்றவை தேனீயின் கொடுக்கில் உள்ளனர். அதனைப்போல, ஆவியாகும் எண்ணெய், பாஸ்போலைஸ், புரதம், வையாளரெனிட்ஸ் போன்றவை உள்ளன. தண்ணீர் மற்றும் அமிலம் என எதிலும் கரையும் தேனீ நஞ்சினை உலர் நிலையில் பல ஆண்டுகள் பாதுகாக்கலாம். இதில் பாஸ்பேட், செம்பு, கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்களும் இருக்கின்றது. Breast Milk: தாய்ப்பால் அருவியாய் சுரக்க, வெள்ளைப்படுதல், மாதவிடாய் பிரச்சனை சரியாக அம்மான் பச்சரிசி கீரை.. பெண்களே இன்றே தெரிஞ்சிக்கோங்க.!
நரம்பு பிரச்சனைக்கு தீர்வு: தேனீயின் நஞ்சு நமது நரம்பு மண்டலத்தினை ஊக்குவிக்கிறது. நோயெதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது. சாதாரணமாக ஏற்படும் நோய்தொற்றில் இருந்து பாதுகாத்து, நீண்ட கால நோய்களையும் குணப்படுத்துகிறது. நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, கண் நோய்கள், கருவிழி சவ்வுப்படலத்தில் ஏற்படும் அலர்ஜி, விழிவெண்படலத்தில் ஏற்படும் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் சரி செய்யப்படுகிறது.
அதனைப்போல, தோல் நோய்கள், வாத நோய், நரம்பு அலர்ஜி, இரத்த அழுத்தம், மூட்டு வலி மற்றும் ஒற்றைத்தலைவலி போன்ற நோய்களையும் குணப்படுகிறது. ஆனால், எலும்புருக்கி, இதய நோய், நீரிழிவு நோய், மேகநோய் போன்றவற்றுக்கு தேனீயின் நஞ்சு ஏற்கத்தக்கது இல்லை. தேனீயினை இயற்கையாக கொட்டவைத்தும் நாம் பலன்பெறலாம்.
தொழில்நுட்பமும்-நோய்களுக்கான தீர்வும்: இன்றுள்ள தொழில்நுட்ப உலகத்தில் தேனீயின் நஞ்சை கொடுக்கில் இருந்து எடுக்க பல வழிமுறைகள் உள்ளன. அதாவது, தேனீயை பிடித்து கண்ணாடியின் மீது வைத்து குறைந்தளவு மின்சாரத்தை செலுத்தி நஞ்சு சேகரிக்கப்படுகிறது. அதனையும் நாம் உபயோகம் செய்யலாம்.
பின்குறிப்பு & கவனத்திற்கு: தேனீயின் நஞ்சினை தவறான முறையில் சிகிச்சைக்கு உபயோகம் செய்தால் மரணம் கூட ஏற்படலாம். சுய தேனீ மருத்துவமும் கூடாது. அரசு அங்கீகாரம் பெற்ற பண்ணையில் அல்லது ஆராய்ச்சி மையத்தில் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும். சிலருக்கு தேனீ நஞ்சு அலர்ஜியை ஏற்படுத்தலாம். அவ்வாறானவர்கள் இதனை முயற்சிக்க வேண்டாம்.