டிசம்பர், 7: தமிழர்களின் உணவுகளில் பெரும்பாலான வீடுகளில் இடம்பிடித்த காய்கறிகளில் முதன்மையான ஒன்று கத்தரிக்காய் (Brinjal). இது பச்சை மற்றும் ஊதா, வெந்நிறங்களில் கடைகளில் கிடைக்கின்றன. கத்தரிக்காய் என்றால் குழந்தைகளில் சிலருக்கு வெறுப்பு ஏற்படும். அதில் உள்ள நன்மைகள் உடலுக்கு அவசியம் என்றாலும், நம்ம வீட்டு சுட்டீஸின் வீம்பு ஏகபோகம் தான். கத்தரிக்காயில் உள்ள நிக்கோட்டின் உடலுக்கு நன்மை தருகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
கொழுப்புகளை நீக்க: நமது உடலில் அதிகளவு ப்ரீ ரேடிக்கல்ஸ் என்பது இருக்கும். இது செல்களை சேதப்படுத்தும் குணம் கொண்டது ஆகும். கத்தரிக்காய் ரேடிக்கல்ஸை எதிர்த்து போராடுகிறது. இதனால் நம்மை எவ்வித நோயும் தாக்காத வண்ணம் உடலை பாதுகாக்கிறது. இது ஆண்டி-ஆக்சிடண்டாகவும் செயல்படுகிறது. நமது உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புகளை நீக்கி, இரத்த அழுத்தத்தை சம அளவுக்கு கொண்டு வரும் பணியை கத்தரிக்காய் செவ்வனே செய்கிறது. Napkin Dangerous Chemicals: நாப்கினில் ஆபத்தான ரசாயனங்கள்.. பெண்களே உஷாராக இருங்கள்.. பதறவைக்கும் தகவல்.!
நோய்கிருமிகள் அகற்ற: இதனால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் சரியாகின்றன. மூளையில் இருக்கும் பைட்டோ-நியூட்ரிஷியன் செல்களின் திறன் அதிகரிக்கப்படுகின்றன. கத்தரிக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் அளவுக்கு அதிகமாக இருக்கும் இரும்புசத்து குறைக்க பயன்படும். பாக்டீரியாவை எதிர்க்கும் வல்லமை கத்தரிக்காயில் இயற்கையாக உண்டு. தினசரி கத்தரிக்காயை உணவில் சேர்த்தால் நோய்கிருமிகள் நமது உடலில் இருந்து வெளியேறும்.
புகையை நிறுத்த: புகைபிடிக்கும் பழக்கத்தை இயற்கையாக நிறுத்த விரும்பினால், நீங்கள் கட்டாயம் கத்தரிக்காயை சாப்பிட வேண்டும். கத்தரிக்காயில் இருக்கும் இயற்கையான நிகோடின், புகைப்பழக்கத்தை நிறுத்த வழிவகை செய்யும். வைட்டமின், கனிமம் நிறைந்த நார்சத்து கொண்ட கத்தரிக்காய், சருமத்தில் இருக்கும் நச்சினை நீக்கி சருமத்தை ஒளிரவைக்கும்.
சரும பலன்: நமது தோள்களில் இருக்கும் அந்தோசையன் என்ற வேதிப்பொருள், சருமத்தினை இளமையாக வைக்க உதவுகிறது. மேலும், உரோமத்தின் வேர் பகுதியை ஆரோக்கியமாக பராமரித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. வறண்ட சருமம் மற்றும் சரும வெடிப்புகளை குணப்படுத்தவும் உதவி செய்கிறது. இத்தகைய பல குணங்களை கொண்ட கத்தரிக்காயை சாப்பிட்டு பலன்பெறலாமே மக்களே. முடிவு உங்கள் கையில்..