Chinna Vengayam: சிறிய வெங்காயத்தில் இவ்வுளவு நோய்களுக்கு மருந்தா?.. அசரவைக்கும் உண்மை.. இன்றே தெரிந்துகொள்ளுங்கள்.!
Template: Small Red Onion

டிசம்பர், 7: இந்திய உணவுகளில் (Indian Foods) எந்த வகையான உணவுகளை செய்தாலும், அதில் வெங்காயத்தின் (Onion) பயன்பாடு இல்லாமல் இருக்காது. எந்த காய்கறி மாத இறுதியில் உள்ளதோ? இல்லையோ? வெங்காயமும், தக்காளியும் போதும் என பல குடும்பங்கள் இன்றளவும் இருந்து வருகின்றன. வெங்காயத்தில் இருக்கும் புரதச்சத்து, ஊட்டச்சத்து, தாதுஉப்பு, வைட்டமின்கள் போன்றவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை வருகிறது.

நாட்டு (சின்ன) வெங்காயம் நன்மை (Small Red Onion): இன்றளவில் வணிக பயன்பாட்டிற்காகவும், வீட்டு உபயோகத்தில் உள்ள எளிமையான நிலை காரணமாகவும் பல்லாரி என்ற பெருவெங்காயங்களே மக்களால் அதிகளவு விரும்பி வாங்கப்படுகிறது. ஆனால், நாட்டு வெங்காயம் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயத்தில் இருக்கும் நன்மைகள் ஏராளம். அதனை இன்று தெரிந்துகொண்டு நாட்டு வெங்காயத்தை உணவில் சேர்த்து நாம் பலன்பெறுவோம்.

தமிழர்களும்-மருத்துவமும்: தமிழர்கள் அன்றளவில் வெங்காயத்தினை மருத்துவ பொருளாகவும் பயன்படுத்தி வந்தனர். அதனைப்போல, வெளிநாடுகளில் மருந்து பொருளாகவும் பயன்படுகின்றன. சிறிதளவு வெல்லத்துடன் 4 முதல் 5 வெங்காயத்தினை அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும், பித்தத்தினால் ஏற்படும் ஏப்பம் குறையும். Refrigerators buy Tips: பிரிட்ஜ் வாங்க போறிங்களா?.. எந்த பிரிட்ஜ் தேர்ந்தெடுக்க போறீங்க?.. இந்த செய்தி உங்களுக்குத்தான்.! 

சமமான அளவுள்ள வெங்காய சாறு, வளர்பட்டை செடியின் இலைச்சாறுகளை கலந்து காதில் விட்டால் காதில் ஏற்படும் வலியானது குறையும். வெங்காயத்தின் சாறு + கடுகு எண்ணெயை சமமான அளவில் எடுத்து சூடாக்கி, அதனை இளம் சூடாக இருக்கும்போது காதில் எண்ணெய் விட்டால் காது இரைச்சல் சரியாகும்.

மூலக்கோளாறு சரியாக: சின்ன வெங்காயத்தினை சிறிதாக நடுங்கி, இலவம் பிசின் தூளை சேர்த்து, சிறிய அளவிலான கற்கண்டு தூளை சேர்த்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் மூலக்கோளாறு பிரச்சனைகள் சரியாகும். வெங்காயம் உரிக்கும்போது ஏற்படும் நெடி சில வகையான தலைவலியை கட்டுப்படுத்தும். இதனை வதக்கி சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தினால் ஏற்படும் ஆசனக்கடுப்பு நீங்கும்.

வெங்காயத்தினை சுட்டு மஞ்சள், நெய் சேர்த்து பிசைந்து லேசாக சூடேற்றி சூட்டினால் ஏற்பட்ட கட்டிகள் மீது வைத்தால் அது பழுது உடையும். இதனை சாறாக அரைத்து குடித்தால் வயிற்று கோளாறு சரியாகும். மோரில் கலந்து குடித்தால் இருமல் சரியாகும். வெங்காய சாறு + வெந்நீரை கலந்து வாயை கொப்புளித்தால் ஈறு வலி, பற்கள் வலி குறையும்.

உடல்வெப்பம் சமன்பட: வெங்காயத்தினை நன்கு சமைத்து சாப்பிட்டால் உடலில் ஏற்படும் வெப்பநிலை சமமாகும். மூலச்சூடு பிரச்சனை குறையும். தேன் அல்லது கற்கண்டு சேர்த்து வெங்காயம் சாப்பிட உடல் பலமாகும். வெங்காயத்தினை வதக்கி வெறுமையான வயிற்றில் சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி பிரச்சனை குணமாகும்.

தேமல், படை மீது வெங்காயச்சாற்றினை தேய்த்தால் அப்பிரச்னைகள் சரியாகும். திடீர் மூர்ச்சையானவர்களுக்கு வெங்காய சாறினை முகரவைத்தால் அவர்கள் தெளிவு ஆவார்கள். தேன் + வெங்காய சாறு + குல்கந்தை சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி சரியாகும். வெங்காய ரசத்தினை நீர் சேர்த்து குடித்தால் தூக்கம் வரும். Chemical Portion Affect Baby: குழந்தைகளை கருவில் இருந்து பாதிக்கும் வேதிப்பொருட்கள் பிரச்சனை… ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்.! 

மேகநோய்க்கு தீர்வு: பதநீருடன் வெங்காயத்தை நறுக்கி சூடேற்றி குடிக்க மேகநோய் சரியாகும். வெங்காயத்தில் இருக்கும் குறைவான கொழுப்பு சத்து உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு வரப்பிரசாதமாகும். பச்சை வெங்காயம் நல்ல உறக்கத்தை வழங்கும். இதனை தேனில் கலந்தும் சாப்பிடலாம். வயிற்றில் இருக்கும் சிறுகுடல் பாதையினை வெங்காயம் சுத்தப்படுத்தி ஜீரணத்திற்கு உதவி செய்யும்.

நுரையீரலை சுத்தப்படுத்த: இரத்த அழுத்தத்தினை குறைத்து, உடல் இழந்த சக்தியை மீட்டுத்தரும் குணம் வெங்காயத்திற்கு உண்டு. புகைப்பழக்கத்திற்கு அடிமையானர் வெங்காய சாற்றினை நாளொன்றுக்கு 3 வேலை குடித்தால் நுரையீரல் சுத்தப்படும். மூட்டுகளில் ஏற்பட்டுள்ள வலியை குணமாக்கவும், முகப்பரு பிரச்சனையை சரி செய்யவும் வெங்காயம் உதவுகிறது.

மாலைக்கண் சரியாக: வெங்காயச்சாறுடன் உப்பு கலந்து சாப்பிட்டால் மாலைக்கண் நோய் சரிப்படும். வெங்காயத்தினை வதக்கி தேனில் இட்டு இரவில் சாப்பிட்டுவிட்டு பசும்பால் குடித்தால் ஆண்மை அதிகரிக்கும். ஜலதோஷ பிரச்சனையை சரி செய்ய வெங்காயத்தை நுகரலாம். தொண்டையில் ஏற்பட்டுள்ள வலியை குறைக்க வெங்காயத்தினை தொண்டையில் பற்றுபோல போடலாம்.

விஷக்கடிகளுக்கு முதலுதவி: வெங்காயத்தினை பாம்பு கடித்த பின்னர் தின்ன கொடுத்தால், அதனால் விஷம் இறங்கும். விரைந்து அவரை மருத்துவமனையில் அனுமதி செய்து காப்பாற்றிவிடலாம். வெங்காயத்தை கொதிக்கவைத்து அந்நீரை குடித்தால் சிறுநீர் கடுப்பு, எரிச்சல் போன்றவை சரியாகும். நாய் கடித்த இடத்தில் வெங்காயம் & சோடா உப்பு சேர்த்து தடவி, வெங்காய சாறினை குடித்தால் நாய் விஷம் குறையும்.

மூலநோய் குணமாக வெங்காயத்தினை சாறோடு சேர்த்து சர்க்கரை இட்டு குடிக்கலாம். கைப்பிடி சாதத்துடன் உப்பு, வெங்காயம் சேர்த்து அரைத்து வெற்றிலையில் சுற்றி நகசத்து உள்ள இடத்தில் வைத்தால் நோயின் வீரியம் குறையும். நீரிழிவு நோயாளிகள் வெங்காயத்தினை அதிகளவு சாப்பிடலாம்.

வலிப்பு குணமாக: தலைப்பகுதியில் முடி திட்டு போல உதிர்ந்து இருந்தால் சிறிய வெங்காயத்தினை இரண்டு துண்டாக நறுக்கி தேய்க்க வேண்டும். காக்கா வலிப்பு பிரச்சனை இருப்போருக்கு தினமும் வெங்காயச்சாறு கொடுக்கலாம். வெங்காயத்தினை தினமும் மென்று சாப்பிட டி.பி குறையும். வெங்காயச்சாறுடன் சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதம் குறையும்.

தேள் கடித்துவிட்டால் அது கடித்த இடத்தில் வெங்காயம் நசுக்கி தேய்க்க விஷமானது முறியும். தினமும் 3 வெங்காயம் சாப்பிட பெண்களுக்கு உதிரச்சிக்கல் சரியாகும். பசும் தயிரோடு வெங்காயம் சேர்த்து சாப்பிட தாது பலப்படும். விளக்கெண்ணெயில் வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை குறையும்.

கேடான கொழுப்புகள் குறைய: இரத்த நாளக்கொழுப்பு பிரச்சனை உள்ளவர்கள், மாரடைப்பு நோயாளிகள் சின்ன வெங்காயத்தினை சாப்பிடலாம். கொழுப்பை கரைக்கும் வல்லமை வெங்காயத்திற்கு உண்டு. 48 நாட்கள் வெங்காயம் சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியாகும், மூளை பலப்படும். சிறு குழந்தைகளுக்கு வெங்காயம் வதக்கி கொடுக்க ஊட்டச்சத்து கிடைக்கும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 7,2022 04:05 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).