Bathing Cold Water

டிசம்பர், 9: இன்டர்நெஷனல் ஜர்னல் ஆப் சர்க்கம்போலர் ஹெல்த் பத்திரிக்கை, குளிர்ந்த நீரில் குளித்தால் (Cold Water Bathing) உடலுக்கு ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு இருந்தது இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியாகியுள்ளன.

அதன்படி, "ஆண்கள் குளிர்ந்த நீரில் குளித்தால் உடலில் இருக்கும் கொழுப்புகள் எரிக்கப்படுகிறது. நீரழிவு நோய் பாதிப்பு குறைகிறது. நீச்சல் பயிற்சி செய்வது உடலுக்குள் இருக்கும் கலோரியை எரிக்க பேருதவி செய்கிறது.

இது பல நன்மையை உடலுக்கு செய்கிறது. குளிர்ந்த நீரில் நீச்சல் அடிப்பதால் உடலின் அசையும் ஒருங்கே அமைகிறது. இதனால் சருமத்தில் இருக்கும் இரத்த நாளங்கள் கட்டுப்படுத்தப்படும். #Wicket Keeping: உலகளவில் எம்.எஸ் தோனியை போல கவனிக்கத்தக்க இடத்தை பெற்ற விக்கெட் கீப்பர்கள் யார் யார்?.. விபரம் இதோ.! 

சருமத்தில் உள்ள திசுக்களில் இரத்தம் ஆழமாக வேரூன்றி சென்று இரத்த ஓட்டம் மேம்படுகிறது. விளையாட்டு பயிற்சி எடுக்கும் வீரர்கள், குளிர்ந்த நீரில் குளிப்பது உடல் வலிமையை குறைக்க உதவி செய்யும்.

தசைகளை தளர்வடைய செய்து உடல் சோர்வை போக்கும். கலோரிகளை விரைவில் எரித்து இதய கோளாறுகளை சரி செய்யும். குளிர்ந்த காலங்களில் நீச்சல் பயிற்சி செய்யும் வீரர்களின் உடலில் இன்சுலின் அதிகரிக்கும். அதனால் அவர்களுக்கு சர்க்கரை நோய் அபாயமும் குறைவுதான்.

Note: பனிக்கட்டியுடன் உள்ள நீரில் குளிப்பது என்பது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அறைவெப்ப நிலையில் (Room Temperature Water) உள்ள தண்ணீரே உடலுக்கு நல்லது. மாறாக குளிர்ந்த நீர் என்பதால் உடலை நடுக்கும் குளிரை செயற்கையாக ஏற்படுத்தி குளிப்பது உடலின் வெப்பநிலையை அதிகரிக்க உதவும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 9,2022 06:45 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).