ஜூன் 14, ஆரோக்கியம் (Health Tips): பனை மரத்தில் இருந்து தயாரிப்பு முறையில் கிடைக்கும் பனங்கற்கண்டு, பனையின் கொடை போல உடலுக்கு பல நன்மைகள் தரவல்லது. பனங்கற்கண்டில் சுண்ணாம்பு சத்து, இரும்புசத்து, சாம்பல் சத்து, புரதசத்து, துத்தநாகம் மற்றும் பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளான.
பனங்கற்கண்டுடன் ஒரு சிறிய கரண்டி சின்ன வெங்காய சாறு சேர்த்து குடித்து வர சிறுநீரக கோளாறு சரியாகும். பனங்கற்கண்டு, நெய் மற்றும் நிலக்கடலை ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு வர மூளை வளர்ச்சி பெருகி, நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.
பாலில் பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் மார்புச்சளி பிரச்சனை சரியாகும். பனங்கற்கண்டை வாயில் வைத்து சுவைத்து வரும் உமிநீரை சிறுக விழுங்கினாள் வாய்துர்நாற்றம், தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி போன்றவையும் நீங்கும். அதேபோல, உடல் வெப்பம், காய்ச்சல் காரணமாக ஏற்படும் வெப்ப பிரச்சனை சரியாகும்.
குழந்தைகளின் உடல்நிலை மெலிந்து இருந்தால், பனங்கற்கண்டில் உள்ள குளுக்கோஸ் குழந்தையின் உடல்நலனை சீராக்கும். கருவுற்ற மற்றும் மகப்பேறு அடைந்த பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல், வயிற்றுப்புண் போன்ற பிரச்சனையை குணப்படுத்தும். டைபாய்டு, நீர்க்கட்டு, இதயம் சார்ந்த நோய்கள் குணமாகும். இதயம் வலுவாகும்.
பனங்கற்கண்டில் இருக்கும் கால்சியம் பற்களை உறுதியாக்கி, ஈறுகளில் இரத்தம் கசிவு போன்ற பிரச்சனை இருந்தால் அதனை சீராக்கும். கோடையில் ஏற்படும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இளநீரோடு பனங்கற்கண்டு மற்றும் ஏலக்காய் சேர்த்து குடிப்பது நல்லது. சர்க்கரை நோயாளிகளும் பனங்கற்கண்டை எடுத்துக்கொள்ளலாம்.
இயற்கையின் கொடை எதுவாக இருப்பினும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.