Cancer | Girl Periods | Elantha Pazham (Photo Credit: Pixabay / Foodipedia)

ஜூலை 01, ஆரோக்கியம் (Health Tips): கிராமப்புறங்களில் செழித்து வளரும் இலந்தை பழம், திராட்சையை விட சத்துக்கள் கொண்டது. இதனுள் அதிக ஊட்டச்சத்து நிரம்பி இருந்தாலும், பழத்தின் விலை மிகவும் குறைவாகும். இதனால் இப்பழம் ஏழைகளின் பழம் என்றும் அழைக்கப்படுகிறது.

இனிப்பு, புளிப்பு கலந்த சுவையுடன் இருக்கும் இலந்தை பழத்தை நினைத்தாலே பலருக்கும் நாவில் எச்சில் ஊறும். அப்பழத்தை பறிக்கச்சென்று முட்களிடம் படாத பாடுபட்டு ருசிபார்த்தோருக்கு மட்டும் தான் அவ்வருமை புரியும்.

இப்பழத்தின் காய் பச்சை நிறத்திலும், பழுத்த பழம் சிவந்த மற்றும் சிவப்பு கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும். பழத்தில் கொட்டையை சுற்றிலும் இருக்கும் சதைப்பகுதி சுவை மிக்கது. Samsung Galaxy S23 FE: சாம்சங் நிறுவன செல்போன் பிரியரா நீங்கள்?.. விரைவில் வெளியாகும் Galaxy S23 ஸ்மார்ட்போன்..!

இலந்தை பழத்தின் பூர்வீகம் சீனா என்றாலும், பல ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவிலும் பயன்பாட்டில் இருக்கிறது. இதன் இல்லை, வேர், பட்டை போன்றவை மருந்தாகவும் நமக்கு பயன் அளிக்கிறது.

வைட்டமின் ஏ, சி, பி3, பி6 ஆகிய வைட்டமின்களும், இரும்பு, தாமிரம், கால்சியம், பொட்டாசியம், மாக்னீசு, பாஸ்பிரஸ் போன்ற தாது உப்புகள், கார்போஹைட்ரேட் & புரதம் ஆகியவை இருக்கின்றன.

இரவு நேரங்களில் உறக்கம் வராமல் தவிப்போர் இலந்தை பழத்தை சாப்பிட்டால் மன அமைதி ஏற்பட்டு உறக்கம் ஏற்படும். இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தி அதிகரித்து இரத்தம் ஓட்டமானது சீராகும். எலும்பு தேய்மானம் தடுக்கப்படும். Warner Bros Studios Fire: வார்னர் ப்ரோஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து; ஹாலிவுட்-டில் பதற்றம்.!

குடல் புற்றுநோய் வராமல் தடுக்கப்படும். நோயெதிர்ப்பு தடுப்பாற்றல் உடலுக்கு கிடைக்கும். உடல் சூடு தவிர்க்கப்படும். பேருந்து பயணத்தில் சிலருக்கு ஏற்படும் வாந்தி, தலைசுற்றல் போன்றவை தவிர்க்கப்படும். உடல் வலி நீங்கும்.

மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நிவாரணியாக இலந்தை பழம் உள்ளது. இதனை அளவுக்கு மீறி சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு மாறுபடும். ஆகையால், அளவோடு சாப்பிடுவது நல்லது.