ஜூலை 01 , புதுடெல்லி (Technology News): தென்கொரியாவின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனம் (Samsung), தனது கேலக்சி S23 மாடல் செல்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
சீன ஊடக செயல்பாடுகளை கவனிக்கையில், சேம்சங் நிறுவனத்தின் S23 மாடல் (Samsung Galaxy S23 FE) செல்போன் வெளியீடு உறுதியை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பிளிப்கார்ட் மூலமாக இதன் விற்பனை தொடங்கவுள்ளது.
சர்வதேச அளவில் செல்போன் விற்பனைக்கு 3C (China Compulsory Certificate) என்ற சான்றிதழ் அவசியமாகிறது. சாம்சங் நிறுவனம் தனது S23 ஸ்மார்ட்போனை SM-S7710 என்ற பெயரில் 3C சான்றிதழ் வாங்க விண்ணப்பித்து இருந்தது உறுதியானதால், அது சாம்சங் நிறுவனத்தின் S23 FM ஸ்மார்ட்போன் என உறுதி செய்ய்யப்ட்டுள்ளது. Warner Bros Studios Fire: வார்னர் ப்ரோஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து; ஹாலிவுட்-டில் பதற்றம்.!
5G நெட்ஒர்க் அமைப்புடன் களமிறங்கும் ஸ்மார்ட்போனுடன் 25W சரசரும் வழங்கப்படும். C மாடல் சார்ஜிங் வசதி, முதற்கட்ட மைக்ரோபோன் போனுக்கு அடிப்பகுதியில் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
6.4 இன்ச் அளவுள்ள டிஸ்பிளே, 50 MP கேமரா, 8 MP டெலிபோட்டோ, 12 MP ஆல்ட்ரா வைட் அங்கிள் ஸ்னாப்பர், 8 GB ரேம், 256 GB இன்டெர்னல் மெமரி, 4,500 mAh பேட்டரி திறன் அம்சங்களுடன் செல்போன் விரைவில் சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.