Holy Fasil or Thulasi (Photo Credit: Amazon / Indiamart)

செப்டம்பர் 09, சென்னை (Health Tips): இந்தியா, தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் பரவலாக பயிரிடப்பட்டு அல்லது இயற்கையாக வளர்க்கும் தன்மை கொண்டது துளசி (Thulasi). இந்திய ஆயுர்வேதம் மற்றும் இந்திய மக்களிடையே பயன்பாட்டில் இருக்கும் துளசி (Holy Basil), இந்து மத மக்களிடையே புனித செடியாகவும் கருதப்படும். இந்தியாவை பொறுத்தமட்டில் துளசிகள் ராம் துளசி, கிருஷ்ண துளசி, காட்டு துளசி, வெண்துளசி, கருந்துளசி, நாய்த்துளசி, செந்துளசி, நற்றுளசி என பல வகைப்படுத்தப்பட்டுள்ளது. மண்ணின் வளத்திற்கேற்ப இவை வளருகின்றன.

துளசியில் குவிந்துகிடக்கும் நன்மைகள் காரணமாக, அது மூலிகைகளின் ராணி என்றும் அழைக்கப்படுகிறது. நோயெதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிப்பதில் இருந்து கல்லீரல், தோல், சிறுநீரகம், கெட்ட கொழுப்புகளை உடலில் இருந்து வெளியேற்றுதல், இதயத்திற்கு நன்மை என பல நன்மைகளை தன்னகத்தே கொண்டிருப்பதால் துளசியை மருத்துவ பயன்பாடுகளுக்கு பயன்படுத்துகின்றனர். இந்த ஏழைகளின் மூலிகை விஷ்ணு, பெருமாள் மற்றும் ராமர் கோவில்களில் பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.

காய்ச்சல் வந்துவிட்டால் அன்றைய நாட்களில் பாட்டி துளசியுடன் மிளகை நசுக்கி, நீர் விட்டு அரைத்து சுண்டக்காய்ச்சி வடிகட்டி கொடுப்பார். இது இந்திய கலாச்சாரத்தில், தென்னிந்தியர்களின் வாழ்வியலில் தவிர்க்க இயலாதவையாக இருந்துள்ளது. காலப்போக்கில் நமது விருப்பத்திற்கேற்ப துளசியை பயன்படுத்தி சாப்பிட்டு வருகிறோம். சிலர் அதனை முற்றிலும் மறந்தும் இருக்கின்றனர். சளி, இருமல், காய்ச்சல், உடல் வெப்பத்தை தணிக்க, நாட்பட்ட நோய்களை குணப்படுத்த, நீரழிவு நோய் மற்றும் அதனால் ஏற்படும் உடல் பருமன், தோல் சார்ந்த நோய்களை குணமாக்கும் தன்மையும் துளசிக்கு உண்டு. Silver Bat to Virat Kohli: விராட் கோலிக்கு வெள்ளியில் செய்யப்பட்ட கிரிக்கெட் பேட் பரிசளித்த இலங்கை வீரர்கள்.! மகிழ்ச்சியில் விராட்..! 

செம்பு பாத்திரத்தில் நீர்விட்டு, கைப்பிடியளவு துளசி சேர்த்து 8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இந்நீரை வெறும் வயிற்றில் 48 நாட்கள் என 1 மண்டலம் குடித்து வர, எவ்வித நோயும் நம்மை அண்டாது. தோல் சுருக்கம் சரியாகும், நரம்பு பலமாகும், பார்வைக்குறைபாடு பிரச்சனை சரியாகும், இளமையாக இருக்கலாம். தினம் சிறிதளவு துளசி சாப்பிட குடல், வயிறு, வாய் பிரச்சனை சரியாகும். வாய் துர்நாற்றம் இருக்காது. குளிக்கும் நீரில் இரவே துளசி இலைகளை சேர்த்து மறுநாள் அந்நீரில் குளிக்க வியர்வை நாற்றம் இருக்காது, உடல் துளசியாக மணக்கும்.

துளசியில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, கே, கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பிரஸ், பொட்டாசியம், புரதம் போன்றவை உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும். இதில் இருக்கும் வைட்டமின் சி, ஜின்க் சத்துக்கள் இயற்கை நோயெதிர்ப்பு சக்தி கொண்டவை, தொற்றுக்களை தடுப்பவை ஆகும். துளசியின் ஆண்டி-பாக்டீரியல் எதிர்ப்பு பண்பு தொற்றுநோய்களை அண்டவிடாது. இயற்கையாக துளசியில் இருக்கும் Ocimumosides A & B சேர்மங்கள், மூலையில் இருக்கும் நரம்புக்கடத்திகளை சமன் செய்து மனரீதியான அழுத்தத்தை குறைக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

அதேபோல புற்றுநோயை எதிர்க்க, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, சிறுநீரக கற்கள் தொடர்பான பிரச்சனையை சரிசெய்ய, கீல்வாத பிரச்சனைகள் குணமாக, இரைப்பை குடல் கோளாறு சரியாக, தோல் மற்றும் முடிகள் பிரச்சனை குணமாக துளசி உதவுகிறது. இயற்கை பூச்சி விரட்டியாகவும் துளசி செயல்படும். உலர்ந்த துளசி இலைகளை தானியத்தோடு கலந்து வைக்க வேண்டும். புகை பழக்கத்தை மறக்கவும் துளசி உதவுகிறது.

குறிப்பு: துளசியை யார் வேண்டுமானாலும், அளவுடன் சாப்பிட்டு மேற்கூறிய நற்பலன்களை பெறலாம். துளசி என்ற அமிர்தத்தின் அளவு அதிகரித்தால், கட்டாயம் அது சார்ந்த ஆபத்துகளும் ஏற்படும். கருத்தரிக்க விரும்பும் பெண்கள் துளசியை தவிர்ப்பது நல்லது.