Ladies Finger with Flower (Photo Credit: Pixabay)

ஜூன் 28, சென்னை (Health Tips): எத்தியோப்பியாவை பூர்வீகமாக கொண்ட வெண்டைக்காய் இன்றளவில் தமிழர்களின் உணவில் பிரதானமாக இடம்பெற்றுவிட்டது. வெண்டைக்காய் சாப்பிடுவதால் பல நன்மைகள் ஏற்படுகிறது. அவற்றில் குறிப்பிடத்தக்க வகையில் மூளை வளர்ச்சி இருக்கிறது.

வெண்டைக்காய் சாப்பிடுவதால் மூளை வளர்ச்சி ஏற்படும். வெண்டைக்காய்க்கும் - அறிவு வளர்ச்சிக்கும் நேரடி தொடர்பு உண்டு. அது சர்க்கரை நோய், அனீமியா, ஆஸ்துமா, மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், பார்வைக்குறைபாடு உட்பட பல பிரச்சனைகளுக்கு எதிராக செயல்படுகிறது.

இதில் இருக்கும் புரதம், நார்சத்து, கொழுப்பு, கால்சியம், இரும்புசத்து, பாஸ்பிரஸ், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் சி, பி1, பி2, பி6, பி9 உட்பட பல சத்துக்கள் உடலுக்கு நன்மைகளை தருகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு தேவைப்படும் போலிக் அமிலத்தை தருகிறது. HC On Absence of Semen: “பலாத்காரத்தை உறுதி செய்ய விந்து இல்லாவிட்டாலும், இந்த ஆதாரம் போதும்” – உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..! 

வெண்டைக்காயை சமைத்து சாப்பிடும்போது சிலர் கொழகொழப்பு தன்மை பிடிக்காமல், வானெலியில் வெண்டைக்காயை நறுக்கி இட்டு மிதமான தீயில் வறுத்து பின் சமைத்து சாப்பிடுவார்கள். அவ்வாறு சாப்பிட கூடாது. வெண்டைக்காயின் கொழகொழப்பு தன்மை தான் அதன் மருத்துவமும் ஆகும்.

Ladies Finger Curry (Photo Credit: Pixabay)

இவ்வழவழப்பில் இருக்கும் நார்சத்து அல்சரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருமருந்து ஆகும். மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பல பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது. பெண்களுக்கு உடலுறவின் போது பிறப்புறுப்பில் அதிக வலி இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு பெண்ணுறுப்பில் உடலுறவின் போது அதன் வலியை குறைக்கும் திரவம் சுரக்கவிலை என்று அர்த்தம்.

அந்த திரவத்தின் சுரப்புக்கு வெண்டைக்காயின் வழவழப்பு தன்மையில் உள்ள மூலப்பொருள் தான் உதவி செய்கிறது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த கரையும் நார்சத்து இதய நோய்களுக்கான ஆபத்தினை குறைக்கிறது. ஆண்டி-ஆக்சிடென்ட் புற்றுநோக்கி செல்களை அழிக்கிறது. ஆஸ்துமாவின் தீவிரத்தை குறைக்கவும் வெண்டைக்காய் உதவி செய்கிறது.

வெண்டைக்காயில் இருக்கும் போலேட் எலும்புகளை உறுதியாக்குகிறது. இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. சளி, இருமல் பிரச்சனையையும் தவிர்க்க உதவி செய்கிறது. எடை குறைப்புக்கு உதவி செய்கிறது. பார்வைத்திறன் குறைபாடு கொண்டோர் வெண்டைக்காயை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இரத்த விருத்திக்கும் வெண்டைக்காய் உதவுகிறது.