மார்ச் 17 (Health Tips): நாம் சாப்பிடும் உணவில் நார்சத்து அதிகம் இருந்தால் தான், அதன் செரிமானம் விரைந்து நடக்கும். இறைச்சி உணவுகள், எண்ணெயில் பொறிக்கப்பட்டவற்றில் நார்ச்சத்துக்கள் குறைவு என்பதால், அதனை சாப்பிடும் போது செரிமான சார்ந்த விஷயங்களும் சிரமமாக இருக்கும்.
நார்சத்து அதிகம் இருக்கும் சிவப்பு அரிசி (Benefits of Red Rice) மற்றும் அது சார்ந்த உணவுகளை சாப்பிடும்போது, செரிமான உறுப்புகளின் நலன் மேம்படும். சிவப்பு அரிசி புரதசத்து அதிகம் கொண்ட தானியம் என்பதால், உடலின் சீரான இயக்கம், பிராணவாயு உடலின் ஒவ்வொரு திசுக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்கிறது.
ஒவ்வொரு நாளிலும் சிகப்பு அரிசி உணவை காலையில் எடுத்துக்கொண்டால், அன்றைய நாளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உடலுக்கு கிடைத்துவிடும். குழந்தைகள் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க, உடல் மற்றும் மனம் வளர்ச்சி பெற புரதசத்துள்ள உணவுகள் அவசியம். College Student: இரயில் சக்கரத்தில் சிக்கி கால்களை இழந்த கல்லூரி மாணவர்; சிதம்பரத்தில் நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
சிவப்பு அரிசியில் தயாரிக்கப்படும் கஞ்சி, இட்லி, புட்டு, இடியாப்பம் போன்றவற்றை அவ்வப்போது குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். உடலின் எடையை குறைக்க நினைப்போர், அதிக கொழுப்பு இல்லாத உணவை சாப்பிட நினைப்போர் சிவப்பு அரிசியை சாப்பிடலாம்.
இதனால் உடலுக்கு உற்சாகம், சோர்வு அடையாத நிலையும் கிடைக்கும். கோடையில் உடல் சூடு அதிகரித்து வியர்வை வெளியேறும். அப்போது, உடலின் அத்தியாவசிய சத்துக்களும் குறிப்பிட்ட அளவு வெளியேற்றப்படும். இதனை கட்டுப்படுத்த சிவப்பு அரிசியுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.
குழந்தையை பெற்றெடுத்த பெண்கள், தாய்ப்பால் வழங்கும் பெண்கள் சிகப்பு அரிசி உணவுகளை சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும், உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியமும் அதிகமாகும். நீரிழிவு நோய் பாதிக்கபட்டவர்கள் சிகப்பு அறிவி உணவுகளை சாப்பிடலாம்.
நாளொன்றுக்கு ஒரு முறையாவது சிகப்பு அரிசி சாப்பிடும் நபர்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் என்பது குறைகிறது. இரத்த கொதிப்பு, இரத்த அழுத்தம் சம்பந்தமான பாதிப்புகளை கொண்டுள்ளவர்களும் சிகப்பு அரிசியை சாப்பிடலாம். இதனால் இரத்த அழுத்த பிரச்சனை சரியாகும். உடல் சுறுசுறுப்படையும்.