ஆகஸ்ட் 02, ஆரோக்கியம் (Health Tips): எலுமிச்சை குடும்ப வகையை சேர்ந்த இனிப்பு, புளிப்பு சுவை நிறைந்த பழம் சாத்துக்குடி. இது விலை குறைந்த பழம் ஆகும். அதனால் இதனை ஏழைகளின் ஆரஞ்சு எனவும் அழைப்பார்கள். சாத்துக்குடியில் பல நன்மைகள் நிறைந்துள்ளன.
சாத்துக்குடி நமது உடலுக்கு நீர் சத்துக்களை வழங்குவது மட்டுமல்லாமல், குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதில் 90% நீர்சத்து நிறைந்துள்ளது. அதேபோல, கார்போஹைட்ரேட், நார்சத்து, கொழுப்பு, பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் சி நிறைந்துள்ளன. Jio Book: லேப்டாப் பிரியர்களுக்கு நற்செய்தி; ரூ.16,499-க்கு அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் களமிறங்கியது ஜியோ புக் லேப்டாப்.. விபரம் இதோ.!
இப்பழத்தின் சிறப்பே அதன் கலோரிகள் குறைவான விகிதம் தான். 43 கலோரிகள் கொண்ட சாத்துக்குடி, டயட்டில் இருப்போருக்கு நல்லது. உடல் எடையை குறைக்க ஆரோக்கிய பானமாக இதனை பருகலாம்.
நமது உடல் அன்றாடம் சந்திக்கும் களைப்பினை சாத்துக்குடி நீக்கும். உடலின் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் ஆற்றலை வலுப்படுத்தும். கண்களை பாதுகாக்கும், செரிமான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.