டிசம்பர், 9: சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவை கொண்ட மருந்து பொருள் திரிகடுகு (Trikadugam) ஆகும். திரி என்றால் 3 என்பது பொருள். அனைவரின் வீட்டிலும் கட்டாயம் இருக்கும் இயற்கை மருந்து திரிகடுகம். இன்றுள்ள காலத்தில் திரிகடுகு நாட்டு மருந்து கடைகளிலும் எளிதில் கிடைக்கின்றன.
தரமான சுக்கை தோலை நீக்கி வானெலியில் இட்டு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின், அதனை மிக்சியில் அரைத்து பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். சுக்கை போல மிளகு & திப்பிலியை தனித்தனியே வறுத்து எடுக்க வேண்டும். அதனை அரைத்து காற்று புகாத குவளையில் இட்டு வைத்துக்கொள்ள வேண்டும். Cow Eats Plastic: நாப்கின், பாலிதீன் சாப்பிட்டு கிடைக்கும் பசும்பாலை குடித்தால் பேராபத்து.. பதறவைக்கும் உண்மை அம்பலம்.!
திரிகடுகு சூரணம் என்பது காரத்தன்மை கொண்டது என்பதால், அதனை 12 வயதுக்கு மேல் இருக்கும் நபர்களுக்கு கிராம் அளவில் சூடான நீர் மற்றும் தேன் கலந்து குடிக்க வேண்டும். 12 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளுக்கு 2 ஸ்பூன் அளவில் தேனில் குழைத்து சாப்பிட கொடுக்கலாம். இதனால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும், நோய்கள் விலகும்.