டிசம்பர், 11: ஆங்கிலத்தில் அனிமியா (Anemia) என்று அழைக்கப்படும் இரத்த சோகை பிரச்சனை, நமது உடலில் இரும்புசத்து குறைவதினால் ஏற்படுகிறது. இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்களுக்கு உடலில் சிவப்பணுக்கள் (Blood Red Cells) இருக்காது. சிவப்பணுக்கள் உடலின் தாதுகளுக்கு பிராண வாயு கொடுக்கிறது. இன்று இரும்பு சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகை குறித்து காணலாம்.
நமது உடலில் இரும்புசத்து குறைவதினால் இரத்தத்தில் இரத்த அணுக்கள் உருவாகாது. எலும்பு மஜ்ஜைகளில் உருவாகும் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும் போது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. இரத்த சிவப்பணுக்கள் உடலில் 3 மாதம் முதல் 4 மாதங்கள் வரை வாழுகின்றன.
சிவப்பணுவில் இரும்பு சத்து பெரும் உதவி செய்கிறது. இரும்பு சத்து இல்லாத பட்சத்தில் இரத்தத்தால் பிராண வாயுவை கையாள்வது கடினம் ஆகும். நமது உணவில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்தின் சேமிப்பு குறைபடும் போது இரத்த சோகை ஏற்படும். மூல பாதிப்பு உள்ளவர்கள், மாதவிடாய் நாட்கள், வயிற்றில் குடல் புண் இருப்பவர்களுக்கு இரத்த வெளியேறும். #CentralGovtSchemes: நரேந்திர மோடி அரசின் 5 முக்கிய சாதனைகள் என்னென்ன?..!
சிலரது உடலில் இரும்புச்சத்தினை ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மை என்பது இருக்காது. மகப்பேறு, தாய்ப்பால் ஊட்டும் காலங்களில் இரும்புசத்து என்பது அதிகம் தேவைப்படும். உணவுக்குழாய் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், வலி நிவாரணி மாத்திரை சாப்பிடுதல் போன்றவையும் இரத்த சோகையை உருவாக்கும்.
இறைச்சி, பாசிப்பயறு, மீன், சோயா பீன்ஸ், முந்திரி, கீரை, பேரிச்சம்பழம், கரிசலாங்கண்ணி, முட்டையின் வெள்ளை கரு போன்றவையில் இரும்புசத்து உள்ளது. இதனை சாப்பிடுவது இரும்பு சத்தை அதிகரிக்கும். இரத்த சோகையை சரி செய்ய தினமும் காய்கறிகள், பழங்களை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.