டிசம்பர், 10: நமது உடலின் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க ஊட்டச்சத்துக்கள் முக்கியம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவினை நாம் சாப்பிட வேண்டும். சத்துக்கள் நிறைந்த உணவுகளை தேடி எப்படி சாப்பிடுகிறோமோ அதேபோல சரியான நேரத்தில் சாப்பிடுவது அவசியம் (Eating Food). இன்றுள்ள காலத்தில் இரவு நேரத்தில் சிலர் 9 மணிக்கும், 10 மணிக்கும் சாப்பிடுகிறார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் இளைஞர்களோ 12 மணிக்குத்தான் இரவு நேர சாப்பாட்டினை முடித்து உறங்குகிறார்கள்.
இவ்வாறாக நேரம் கடந்து சாப்பிடுபவர்களுக்கு செரிமான மண்டலத்தில் (Digestion Problem) பிரச்சனை ஏற்படும் என்றும், அந்நிலை தொடரும் பட்சத்தில் உடலின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இரவு நேரங்களில் 7 மணிக்குள் கட்டாயம் சாப்பிடுவது உடலின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எங்கு வேலை பார்த்தாலும், எந்த விதமான பணிகள் இருந்தாலும் உடல் நலத்தில் அக்கறை கொண்டு அனைவரும் செயல்பட்டு வந்தோம். Most Dangerous Places: உலகளவில் சுற்றுலா செல்லக்கூடாத ஆபத்துகளை கொண்ட இடங்கள் என்னென்ன தெரியுமா?..!
ஆனால், இன்றளவில் ஏற்பட்டுள்ள பல பிரச்சனைகள், வேலைப்பளு, அலைச்சல் வேலைகள் (Work Pressure) போன்றவற்றால் நமது ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் சரியான உணவுப்பழக்கம் இல்லாத காரணத்தால் கேள்விக்குறியாகியுள்ளது. இரவு 7 மணிக்குள் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் குறித்து இன்று காணலாம்.
அதாவது, இரவுகளில் தாமதமாக சாப்பிடுதல் உணவு ஜீரணத்திற்கு வழிவகை செய்யாது. இரவு உணவை எடுத்துக்கொள்வதற்கும் - உறங்க செல்வதற்கும் இடையே குறைந்தபட்சம் 2 மணிநேர இடைவெளி இருக்க வேண்டியது அவசியமாகும். தாமதத்துடன் சாப்பிடுவது அஜீரணம், நெஞ்சு எரிச்சல் போன்ற கோளாறுகளை உண்டாக்கும். அதேபோல, இரவுகளில் நேரமெடுத்து சாப்பிடுவது, உடனடியாக உறங்க செல்வது தூக்க சுழற்சிக்கு இடையூறினை ஏற்படுத்தும்.
இரவு நேரத்தில் 7 மணிக்கு சாப்பிட்டுவிட்டு, 9 மணிக்கு உறங்க செல்வது சிறந்த பழக்கம் ஆகும். இதனால் காலையில் எழும்போது சோர்வு இருக்காது. நிம்மதியான உறக்கம் கிடைக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி தானாக கிடைக்கும். காலை & இரவு உணவுக்கு இடையே 10 மணிநேர இடைவெளி இருப்பது நல்லது. இரவு நேரத்தில் தாமதமாக உணவை எடுத்துக்கொண்டால் கலோரியை எரிக்க நேரம் இல்லாமல், மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு, தைராய்டு பிரச்சனைகள் போன்றவையும் ஏற்படலாம்.