Chandra Grahan 2025 (Photo Credit : Team LatestLY)

செப்டம்பர் 03, திருவண்ணாமலை (Festival News): 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டாவது இறுதி சந்திர கிரகணம் செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏற்பட உள்ளது. இந்த சந்திர கிரகணம் (Chandra Grahan) மார்ச் மாதம் ஏற்பட்ட கிரகண நிகழ்வை போல இல்லாமல் முழுமையான சந்திர கிரகணமாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 7-ஆம் தேதியில் இரவு 09:56 மணியளவில் தொடங்கும் கிரகணம், நள்ளிரவு 01:26 வரை நீண்ட கிரகணமாக நிகழ்கிறது. இந்தியாவில் இதனை மக்கள் கிழக்கு நோக்கிய திசையில் நின்றும் பார்க்கலாம். Lunar Eclipse 2025: இன்னும் 8 நாட்கள் தான்.. வானில் ஏற்படப்போகும் மாற்றம்.. ரத்த நிலவை காண தயாராகுங்கள்.! 

சந்திர கிரகணம் நேரம் :

கிரகணம் பௌர்ணமி நாளில் வரும் நிலையில், ஆவணி பௌர்ணமியில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால் திருவண்ணாமலை மலை கோவிலில் கிரிவலம் செல்லலாமா? கிரகணத்தின் போது செல்லக்கூடாதா? என பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பான சந்தேகத்திற்கான பதிலை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம். வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி அன்று அதிகாலை 01:49 மணியளவில் தொடங்கி 8-ஆம் தேதி அதிகாலை 12:32 வரை பௌர்ணமி திதி இருக்கிறது. அதே நேரத்தில் செப்டம்பர் 7-ஆம் தேதி அதிகாலை 01:41 மணி முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி இரவு 11:38 வரை கிரிவலம் செல்லலாம் என கிரிவலம் செல்லக்கூடிய நேரத்தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

கிரிவலம் செல்ல ஏற்ற நேரம் :

இது குறித்து ஆன்மீகவாதிகள் சிலர் கூறுகையில் திருவண்ணாமலையில் சந்திர கிரகணம் அன்று கிரிவலம் செல்வதால் எந்த விதமான நன்மையும் கிடைக்காது என கூறுகின்றனர். இதனால் கிரிவலம் செல்பவர்கள் கிரகணம் முடிந்த பின்னர் குளித்துவிட்டு இறை வழிபாட்டினை மேற்கொள்ளலாம் எனவும் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் கோவில்களில் நடை சாத்தப்பட்டு இருக்கும் என்பதால் கிரகணம் முடிந்த பின்னர் கிரிவலம் சென்று அருணாச்சலேஸ்வரர் தரிசனம் செய்து வரலாம். செப்டம்பர் 8-ஆம் தேதி இரவு 11:38 வரை கிரிவலம் சென்று வரலாம். சந்திர கிரகணம் முடிந்ததும் குளித்து விட்டு பக்தர்கள் தங்களது கிரிவலத்தை தொடங்கலாம். சந்திர கிரகணம் இல்லாத மற்ற நேரங்களில் கிரிவலம் செல்வது பலனளிக்கும்.