டிசம்பர், 9: ஆரோக்கிய வாழ்வை அளவான குடும்பம் தருவதை போலவே, மகத்துவம்மிக்க சமூகம் உருவாக வேண்டும் என்றால் மக்கள் தொகை (Population) கட்டுப்பாடு என்பது அவசியமாகும். 794 கோடி மக்கள் தொகை கொண்டுள்ள பூவுலகில் நாளுக்கு நாள் பிறப்புகளும், இறப்புகளும் இயற்கையாக நடக்கின்றன. மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்தால், மக்களின் அடர்த்தி அதிகரிக்கும்.
இதனால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய கட்டமைப்புகளை ஏற்படுத்தும் விஷயங்களில் பின்னடைவு ஏற்படும். இவற்றை தடுக்கும் நோக்கத்துடன் உலகளவில் குடும்ப கட்டுப்பாடு (Family Planning) என்ற விஷயம் கொண்டு வரப்பட்டது. பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடில் டியூக்டொமி என்ற சிகிச்சை முறையின் மூலம் பெண்ணின் கருப்பையில் இருக்கும் பெல்லோபியன் விந்தணு குழாயில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
இந்த சிகிச்சை மூலமாக ஆணின் விந்தணு (Sperm) பெண்ணின் கருப்பையில் செல்வது தடுக்கப்பட்டு கருவுறுதல் (Pregnancy) தடுத்து நிறுத்தப்படுகிறது. தற்போது வரையில் பெண்களுக்கு மட்டுமே பெரும்பாலும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆண்கள் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள வாசகடாமி என்ற சிகிச்சை முறையானது உள்ளது. Rainy Season Foods: மழைக்காலத்தில் இந்த காய்கறிகளை சமைத்து சாப்பிடுறீங்களா?.. அச்சச்சோ ரொம்ப ஆபத்து.. உங்களுக்குத்தான் எச்சரிக்கை.!
இம்முறையில் 20 நிமிடத்தில் ஆண்களின் கருத்தடை சிகிச்சை நிறைவு பெறுகிறது. இந்த சிகிச்சை மேற்கொண்ட பின்னரும் ஆண்களால் தாம்பத்திய உறவுகளில் ஈடுபட இயலும். மீண்டும் தனக்கு குழந்தை வேண்டும் என்று விரும்பும் பட்சத்தில், மீண்டும் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை பெற துணையுடன் உறவு வைத்துக்கொள்ளலாம்.
பெண்களுக்கு உரிய அறுவை சிகிச்சை முறையில் அது சாத்தியம் இல்லாதது ஆகும். ஆனால், அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் 3 மாதத்திற்கு எக்காரணம் கொண்டும் தாம்பத்திய உறவில் ஈடுபட கூடாது. கருத்தடை செய்தவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைக்கு பின்னரே தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்.
Note: கருத்தடை மேற்கொள்வது உங்களின் சுய விருப்பம். குழந்தை பிறக்காமல் இருக்க வேண்டும் என கருத்தடை செய்தல் கூடாது. தாம்பத்தியத்தின் போது கருவுருவதை தவிர்க்கும் வழிமுறைகளை கடைபிடித்து கருத்தடை செய்யாமலேயே இன்பமாக வாழலாம்.