டிசம்பர், 11: நாம் தினமும் சோம்பலை உதறித்தள்ளிவிட்டு உடற்பயிற்சி செய்வது (Avoid Lazy, Do Healthy Exercise), உடலுக்கும் - மனதுக்கும் பல்வேறு நன்மைகளை வழங்கும். இவை மன அழுத்தத்தில் இருந்து நம்மை விடுதலை செய்ய வழிவகை செய்யும். அதிகாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் தருவதாகும்.
காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்தல், சைக்கிள் ஓடுதல், நடைப்பயிற்சி செலுத்தல் போன்றவை உடலுக்கு நன்மை செய்வதோடு மட்டுமின்றி, மூளையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செரோடோனின், நோர்பீநெப்ரைன், எண்டார்பின், டோபமைன் போன்ற ஹார்மோன்களை சுரக்க வைக்கிறது.
இது அன்றைய நாள் முழுவதிலும் நமது மனதை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது. படபடப்பு, கோபம் போன்றவற்றையும் கட்டுக்குள் வைக்கிறது. உடற்பயிற்சி என்று கூறினாலே ஜிம்முக்கு சென்று கடுமையான உடல் உழைப்பை வெளிப்படுத்த தேவையில்லை. 10 நிமிடம் போதும். இது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவி செய்யும். #WithdrawnPF: உங்களின் PF பணத்தை 5 நிமிடத்தில் வங்கிக்கு பரிமாற்றம் செய்வது எப்படி?.. இன்றே Apply செய்யுங்கள்.!
அதேபோல், இதயத்தின் இரத்த நாளங்களில் இரத்த ஓட்டமானது சீராகும். நாளொன்றுக்கு குறைந்தது 10 நிமிடம் முதல் 50 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்யலாம். இதனால் உடலின் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இரத்தத்திற்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும். நமது வாழ்நாள் அதிகரிக்கப்படும். உடலின் முதுமை மற்றும் தோல் சுருக்கம் போன்றவை கட்டுப்படுத்தப்படும்.
காலை நேரங்களில் நாம் செய்யும் உடற்பயிற்சி மூளையின் செயல்திறனை மேம்படுத்தும். நமது மூளையில் இருக்கும் நியூரான்கள் தூண்டப்பட்டு, நிறைவுத்திறன் அதிகரிக்கும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் மறதியை குறைக்க உடற்பயிற்சி செய்யவேண்டியது அவசியம். சூரியன் உதிப்பதற்கு முன் நீங்கள் உடற்பயிற்சியை முடிப்பது நன்மை தரும். சுறுசுறுப்பாய் செயல்படுங்கள்.