
மே 18, சென்னை(Health News Tamil): பெற்றோர்கள் பலரும் தங்களது குழந்தைகள் சளி, இருமல் போன்ற நோய்த்தொற்றால் அவதிப்படும்போது சூடான டீ கொடுத்தல் சரியாகிவிடும் என நினைக்கின்றனர். சூடாக இருப்பதால் இதமாக இருந்தாலும் அது குழந்தைகளுக்கு அதிக பாதிப்பையே உண்டாக்கும். அதேபோல சில குடும்பத்தினர் வாடிக்கையாகவே குழந்தைகளுக்கு டீயை சிறுவயதில் இருந்து பழக்கப்படுத்துகின்றனர். தேயிலையில் உள்ள காபின் மூளையை தூண்டி அதனை குடிப்போருக்கு தூக்கம் வராமல் பார்த்துக் கொள்கிறது. இது பெரியோர்களுக்கு நல்லது என்றாலும், குழந்தைகளுக்கு நல்லதில்லை.
டீ குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் :
டீ குடிப்பதால் குழந்தைகளின் மூளை நீண்ட நேரம் தூக்கம் இல்லாமல் இருந்து, ஊட்டச்சத்து குறைபாடு எதிர்கொள்ள காரணமாக அமைகிறது. குழந்தைகளின் மூளை தூக்கம் இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்க டீ கொடுக்கலாம் என்றாலும், அதனால் தூக்கமின்மை பிரச்சனையும் ஒருசேர ஏற்படுகிறது. அதேபோல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையும் பின் நாட்களில் ஏற்படும். குழந்தைகளுக்கு டீ கொடுப்பதற்கு பதிலாக மாற்றுப் பானங்கள் கொடுப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. Karuvadu Chutney: நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான நெத்திலி கருவாடு சட்னி.. செய்வது எப்படி? அசத்தல் டிப்ஸ் உள்ளே.!
பெரியவர்களை விட சிறார்களுக்கு பாதிப்பு அதிகம்:
தேயிலை கொண்டு தயாரிக்கப்படும் டீ குடிப்பதால் பெரியவர்களை விட சிறார்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இவ்வாறான செயல்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கேள்விக்குறியையும் ஏற்படுத்தும். பெரியவர்கள் டீ குடிக்கும் போது அதில் உள்ள காபின் உடலில் இருந்து 4 மணி நேரத்தில் வெளியேறிவிடும் என்றாலும், குழந்தைகளின் உடலில் இருந்து காபின் வெளியேற 12 மணி நேரம் ஆகிறது.
மாற்று பானங்கள் :
இது உடலுக்கு தேவையான இரும்புச்சத்து, கால்சியத்தை உறிஞ்சுவதால் குழந்தைகளின் வளர்ச்சியும் பாதிக்கப்படும். இதனால் அவர்களின் சுறுசுறுப்பு தன்மை முதலில் நல்லபடியாக இருந்தாலும், பின்னாட்களில் அவை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு எரிச்சல், கோபம், தலைவலி போன்ற உணர்வும் ஏற்படலாம். டீக்கு பதிலாக மஞ்சள் பால், மூலிகை கசாயம், சூடான நீரில் எலுமிச்சை கலந்து கொடுப்பது, தேன் கலந்த நீர் போன்றவையும் கொடுக்கலாம்.