
மே 17, சென்னை (Cooking Tips Tamil): சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கருவாடு குழம்பு (Karuvadu Kuzhambu) பலருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று. கருவாடு குழம்பை சுவைமனக்க வைத்து ஒருசில நாட்கள் வரை சாப்பிட்டு மகிழ்ப்பவர்கள் இன்று வரை இருக்கிறார்கள். அதில் சேர்க்கப்படும் கத்தரி, வாழைக்காய் போன்றவையும் புளி-காரம் சுவையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இன்று சுவையான நெத்திலி கருவாடு சட்னி செய்வது எப்படி என காணலாம். Corona Virus: மீண்டுமா? என்ட்ரி கொடுத்த கொரோனா வைரஸ்.. உஷார்படுத்தும் சுகாதாரத்துறை.!
செய்யத்தேவையான பொருட்கள்:
நெத்திலி கருவாடு - 50 கிராம்
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 2 கரண்டி
வரமிளகாய் - 2
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பூண்டு - 20 கிராம்,
புளி - சிறிதளவு
கறிவேப்பில்லை - சிறிதளவு
தக்காளி - 30 கிராம்,
மல்லித்தூள் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் எடுத்துக்கொண்ட நெத்திலி கருவாடை இளம் சூடுள்ள நீரில் ஊறவைத்து தலையை பிய்த்து குடல் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, அதில் கருவாடை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். நெத்திலி கருவாடு மொறுமொறு பதத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
அதே கடாயில் மீண்டும் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், தக்காளி, வரமிளகாய், பூண்டு, புளி, கறிவேப்பில்லை சேர்ந்து நன்கு வதக்கி எடுக்க வேண்டும்.
இவை வதங்கியதும் தனியே எடுத்து கத்தரிக்காய் கொச்சி பிசைவது போல மல்லித்தூள், தேங்காய் எண்ணெய், வதக்கிய பொருட்கள், கருவாடு சேர்த்து பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது சுவையான நெத்திலி சட்னி தயார்.
இறுதியாக சாதத்தில் சேர்த்து கிளறி சாப்பிட்டால் சுவையோ சுவை அருமையாக இருக்கும்.