
ஜூன் 09, சென்னை (Health Tips Tamil): குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் விஷயத்தில் ஒவ்வொரு பெற்றோரும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் உணவே மூல காரணமாக இருக்கிறது. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உணவு அவசியமாகிறது. சிறுவயதில் குழந்தைகளை வைரஸ் தொற்றுகள் எளிதில் தாக்கும். இவ்வாறான தொற்றுகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க அவர்களின் உடலில் ஊட்டச்சத்து அவசியம்.
பிஸ்கட்டின் ருசிக்கு அடிமையாகும் குழந்தைகள் :
அதன் காரணமாகவே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்குவது கட்டாயமாகிறது. ஒரு சில பெற்றோர் குழந்தைகள் அழும்போது அதற்கு உடனடி தீர்வு காணுவதாக பிஸ்கட்டை கொடுத்து உண்ண சொல்வார்கள். குழந்தை முதலில் பிஸ்கட் சாப்பிடும் போது அதன் ருசித்தன்மைக்கு அடிமையாகி, பிறகு எந்த நேரமும் அதனை சாப்பிடும் பழக்கத்தை எடுத்துக் கொள்ளும். இவ்வாறான விஷயம் பின் நாட்களில் மிக மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். Corona Cases in India: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. யாரை குறிவைக்கிறது? தற்காத்துக்கொள்வது எப்படி?. மருத்துவர்களின் விளக்கம் இதோ.!
காலப்போக்கில் விஷமாகும் தன்மை :
அதாவது குழந்தைகளுக்கு கொடுக்கும் பிஸ்கட்டில் எந்த விதமான ஊட்டச்சத்தும் இல்லை. மைதா, சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் பிஸ்கட்டில் உடலுக்கு ஊட்டச்சத்தை வழங்கும் சத்துக்கள் இல்லாததால் அது குழந்தைகளுக்கு தேவையற்றதாக அமைகிறது. மேலும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பிஸ்கட்டில் காலாவதி தேதிக்காக சேர்க்கப்படும் மூலப் பொருட்கள் அதனை விஷத்தன்மையாகவும் காலப்போக்கில் மாற்றுகிறது.
பிஸ்கட்டுக்கு மாற்றாக என்ன செய்யலாம்?
அதிக பசியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட பிஸ்கட், பின்னாளில் குழந்தையை எந்தவிதமான காய்கறி மற்றும் பழங்களையும் எடுத்துக் கொள்ளாமல் பிஸ்கட்டை மட்டுமே சாப்பிடும் நிலைக்கு கொண்டு செல்லும். இதனை தவிர்க்க வீட்டிலேயே கோதுமை கொண்டு பிஸ்கட் செய்யலாம் அல்லது பிஸ்கட் போன்ற பொருட்களை வாங்கி கொடுக்காமல் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்து காய்கறிகள், பழங்கள் சாப்பிட அறிவுறுத்தி அதனையும் மேற்கொள்ளலாம்.