Corona Cases in India (Photo Credit: Pixabay)

ஜூன் 07, சென்னை (Chennai News): கடந்த 2019ம் ஆண்டு மக்களை வாட்டிவதைத்த கொரோனா (Corona Virus Cases in India), 2025ல் மே மாதத்துக்கு பின் மீண்டும் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5364 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சிகிச்சை பலனின்றி 55 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக மத்திய-மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தியுள்ளது. இணைநோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிய, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. Kanyakumari News: வெளிநாடு வேலைக்கு செல்ல காத்திருந்தவர் விபத்தில் பலி.. பிரியாணி வாங்கவந்தபோது சோகம்.! 

கொரோனாவில் தற்காத்துக்கொள்வது எப்படி (Corona Virus Symptoms & Prevention Methods)?

இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், "புதிய கொரோனா அறிகுறிகள் (Corona Symptoms Tamil) முந்தைய கொரோனா போல இருக்கும். இந்த கொரோனா உருமாறிய கொரோனா ஆகும். காய்ச்சல், சளி, இருமல், சிலருக்கு மூச்சுத்திணறல் இருக்கும். இது சாதாரண கொரோனா வைரஸ் தான். புதிய தடுப்பூசி வேண்டுமா? பழையதே போதுமா? என ஆராய்ச்சி நடந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தியிருந்தால் தற்போதைய நிலையில் போதுமானது. அவ்வப்போது சானிடைசர் பயன்படுத்துவது, முகக்கவசம் வெளியே செல்லும்போது அணிந்துகொள்வது நல்லது. தற்போது பரவும் கொரோனா குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகளை குறிவைக்கிறது. நீரிழிவு நோயாளிகள், நோயெதிர்ப்பு மண்டலம், கேன்சர் நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும். பொதுஇடங்களுக்கு செல்வோர் முகக்கவசம் அணிவது நல்லது. இந்த புதிய கொரோனா பழைய கொரோனாவின் தொடக்கம் என்பது நினைவில் இருந்தால் போதும். மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். உயிருக்கு பெரிய பாதிப்பு இருக்காது" என தெரிவிக்கின்றனர்.