Lemon/Tamarind (Photo Credit: Pixabay)

அக்டோபர் 11,  (Health Tips): புளிப்பு உணவுகளை அதிகமாக உண்ணும் போது, உடலில் பல வித பிரச்சனைகள் ஏற்படும். அதனால் செரிமான அமைப்பு சீர்குலைவதோடு, வயிற்றில் எரிச்சல் உணர்வும் ஏற்படக்கூடும். உணவில் அதிகமான எலுமிச்சை, புளி, ஊறுகாய், நெல்லிக்காய் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.

பல் பிரச்சனைகள்

புளிப்பு பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்ளும் போது, பல் கூச்சம் மற்றும் பல் வலி ஏற்படக்கூடும். பல் பிரச்சனைகளோடு போராடுபவர்கள், புளிப்பான உணவுகளை தவிர்ப்பது நல்லது. Padmasana health benefits: உடல் மற்றும் மனதின் ஆற்றல் அதிகரிக்கும்.!அமைதி தரும் அற்புத ஆசனம்.! பத்மாசனம்.!

எரிச்சல் உணர்வு

புளிப்பு உணவுகளை அதிகம் சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் தொண்டை வலி மற்றும் எரிச்சல் உண்டாகக்கூடும். அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது, டான்சில்ஸ் ஏற்படும் அபாயமும் இருக்கிறது.

குடல் பாக்டீரியாக்கள் பாதிக்கப்படும்

குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் (Gut Bacteria), நம் உடலின் செரிமானத்திற்கும், ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானதாகும். ஆனால் உணவில் புளிப்பு பொருட்களை அதிகம் சேர்த்துக் கொள்ளும்போது, இந்த பாக்டீரியாக்கள் குறைந்து, உடலின் சமநிலை பாதிப்படைகிறது. அதனால் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது.

சிறுநீர் தொற்று அபாயம்

பெண்கள், உணவில் புளிப்பு பொருட்கள் அதிகமாக சேர்க்கும் போது, சிறுநீர் தொற்று (Urinary Tract Infection) ஏற்படக்கூடும். உடலில் பி எச் (pH) சமநிலை பாதிக்கப்படும் போது, சிறுநீர் தொற்று அபாயம் ஏற்படுகிறது.