அக்டோபர் 11, (Health Tips): தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறையில், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும். அது இரண்டையும் மேம்படுத்த, யோகாசனம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிலும், அனைவராலும் மிக எளிமையாக செய்யக்கூடிய பத்மாசனத்தின் பயன்களை பார்ப்போம்.
தூக்கமின்மைக்கு தீர்வு
மன அழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு, இரவில் தூக்கம் போதுமான அளவு கிடைப்பதில்லை. உறங்கச் செல்வதற்கு முன் பத்மாசனம் செய்தால், ஆழ்ந்த சுவாசம் மற்றும் செறிவு தூண்டப்படும். அதன் மூலம் இரவில் நிம்மதியான உறக்கம் கிடைக்கும். IND Vs AFG Virat Anger Moment: நொடிப்பொழுதில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற விராட் கோலி: காரணம் என்ன?..! இறுதியில் அசத்தல் வெற்றியடைந்த இந்தியா.!
செரிமானம் மேம்படும்
ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள் நகர்ப்புறங்களில் அதிகரித்து வருகிறது. அதனால் செரிமான கோளாறுகளும் அதிக அளவில் ஏற்படுகிறது. பத்மாசனம் செய்வதன் மூலம், பாதங்கள் வயிற்றுப் பகுதியில் பதிந்து, மசாஜ் போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதனால், ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு செரிமானம் மேம்படுகிறது.
மூட்டுகள் வலுப்படும்
சமீப காலமாக பெரும்பாலானோருக்கு மூட்டு வலி மற்றும் இறுக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. பத்மாசனம் செய்வதின் மூலம் மூட்டுகளில் நீட்சி மற்றும் நீட்டிப்பு உண்டாகிறது. அதனால் மூட்டுகளில் ரத்த ஓட்டம் அதிகரித்து அவை வலுவடையும்.
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வு
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியின் போது மிகுந்த வலியும், பிடிப்பும் ஏற்படக்கூடும். அந்த நாட்களில், அன்றாட வேலைகளை செய்வதே பெரிய சவாலாக இருக்கும். மாதவிடாய் நாட்களில் பத்மாசனம் செய்தால், தசை பிடிப்புகள் தளர்த்தப்பட்டு அசௌகரியங்கள் குறையும்.