Bhogi Festival 2025 (Photo Credit: @bulletsenthil6 X)

ஜனவரி 12, சென்னை (Chennai): உலகத்தமிழர்கள் பொங்கல் பண்டிகை, ஜனவரி 14, 2025 அன்று சிறப்பிக்கப்படவுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு கொண்டாடப்படும் போகிப்பண்டிகை (Bhogi Festival 2025) ஆம் தேதி தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சிறப்பிக்கப்படும். உழவுக்கு வழிவகை செய்த கதிரவனுக்கும், அதற்கு உறுதுணையாக இருக்கும் பசுவுக்கும் நன்றி சொல்லும் விதமாகபொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் போகிப்பண்டிகை (Bhogi 2025) எப்போதும் களைகட்டும். வீட்டில் இருக்கும் பழைய பொருட்கள், தேவை இல்லாத பொருட்களை புறக்கணித்து, அதனை தீயிலிட்டு கொளுத்துவது போகியின் முக்கிய விஷயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதனாலேயே போகிப் பண்டிகைக்கு, "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற பழமொழியும் அடிப்படையாக உள்ளது. Pongal 2025: "தை பிறந்தால் வழி பிறக்கும்" 2025 பொங்கல் வைக்க உகந்த நேரம்.. சிறப்புகள் இதோ..! 

தீய எண்ணங்களை தீயிலிடுங்கள்:

பழைய, தீமையான பழக்கங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களும் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் போன்ற நிகழ்வுகளை எண்ணத்தில் இருந்து எடுத்து, நல்ல பழக்கங்களைக் கொண்டு செயல்படுவதன் நோக்கத்துடன் போகிப் பண்டிகை உணர்த்துகிறது. அதன் பொருளே பின்னாளில் போகி அன்று பழைய பொருட்களை மட்டும் எரித்தால் போதுமானது என்றாகி வழக்காகி இருக்கிறது. போகி அன்று ஒவ்வொரு வீட்டின் வாசலிலும், கூரைகளில் பூலாப்பூ, வேப்பிலை, ஆவாரம்பூ, மாவிலை தோரணம் ஆகியவை அலங்கரிக்கப்படும். ஒரு சில ஊர்களில் போகிப் பண்டிகை என்று வைகறை நேரத்தில் நிலைப்பொங்கல் நிகழ்வும் நடைபெறுகிறது. Mattu Pongal 2025: "உழவனின் நண்பனுக்கு நன்றி சொல்லும் நாள்" - இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்.! 

இறைவனுக்குக் படைக்க:

வீட்டின் முன் வாசலில் மஞ்சள் பூசி திலகமிட்டு, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் ஆகியவை வைத்து தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி தெய்வங்களை வணங்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. போகிப் பண்டிகை அன்று போளி, வடை, பாயாசம், மொச்சை, சிறுதானியம், பருப்பு வகை போன்றவற்றை வைத்து இறைவனுக்கு படைக்கலாம். டெல்டா மாவட்டங்களில் போகி அன்று வீட்டில் மாரியம்மனுக்கு கருவாடு, முட்டை குழம்பு படைத்தும் வழிபடுவார்கள். 2025 அன்று போகி பண்டிகை 13 ஜனவரி 2025 அன்று கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் பொங்கல் வைத்து (Bhogi Pongal 2025 Tamil) வழிபட நல்ல நேரமாக காலை 07:30 மணிமுதல் 08:30 மணிவரையிலும், மாலை 04:30 மணிமுதல் 05:30 மணிவரையிலும் கணிக்கப்பட்டுள்ளது. Kaanum Pongal: காணும் பொங்கல் 2025: கொண்டாட காரணம் என்ன? அசத்தல் தகவல் இதோ.! 

ஒவ்வொருவரும் அவரின் தீய எண்ணங்களை விட்டொழிந்து, நல்ல எண்ணங்களுடன் புதிய ஆண்டின் பயணத்தை, வளர்ச்சிப்பாதையில் தொடங்கி, முயன்றதை அடைய லேட்டஸ்ட்லி தமிழ் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது. சில வாழ்த்துக்களையும் உங்களுக்காக தெரிவிக்கிறது. அதனை நீங்கள் வாட்சப் ஸ்டேட்ஸில் வைத்து உங்களின் நட்பை புதுப்பிக்கலாம். Pongal 2025: தித்திக்கும் தைப்பொங்கல், களைகட்டும் மாட்டுப்பொங்கல், பாசத்துடன் காணும் பொங்கல்... வாழ்த்துச் செய்தி இதோ..! 

போகி பண்டிகை 2025 வாழ்த்து (Bhogi 2025 Wishes in Tamil):

1. "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்பதற்கேற்ப போகியில் புதிய பயணத்தை தொடங்க உறுதி ஏற்போம். இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!

2. பழைய பொருட்களை மட்டுமல்லாது, மனதில் உள்ள அழுக்கான எண்ணங்களையும் தீயிலிட்டு கொளுத்தி புதிய வாழ்க்கையை தொடங்குவோம்.. இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!

3. நினைத்த எண்ணங்கள் ஈடேற, மனத்தூய்மையை உறுதி செய்ய, தீய எண்ணங்களை தீயிலிட்டு கொளுத்துவோம்., இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்!

4. என் அன்பிற்கினிய சொந்தங்களே! போகி நாளில் புதிய நட்புகளை ஏற்படுத்தி, வாழ்வில் முன்னேற்றம் அடைய வாழ்த்துவோம், இனிய போகிப்பண்டிகை நல்வாழ்த்துக்கள்!

5. புத்தாண்டைத் தொடர்ந்து, போகியின் உதயம் உங்களின் வாழ்வில் இன்மையை புகுத்தட்டும்! இனிய போகிப்பண்டிகை நல்வாழ்த்துக்கள்!