Jallikattu Bulls (Photo Credit: Instagram)

ஜனவரி 14, சென்னை (Festival News): தமிழ்நாடு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மற்றும் வீரத்திற்கு பெயர்போனது. தமிழ்நாட்டில் முதன்மை தொழிலாக இருக்கும் விவசாயத்தில், நாட்டு மாடுகள் பெரும் பங்காற்றுகின்றன. அவற்றை கொண்டாடும் வகையிலே தான் ஜல்லிக்கட்டு போட்டி (Jallikattu) ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. கம்பீரமான தோற்றம், கூர்மையான கொம்புகள், மலைக்குன்று போன்ற திமில்களை கொண்டிருக்கும் ஜல்லிக்கட்டு காளைகளைஅடக்கி வீரத்தை வெளிப்படுத்துவார்கள் இளைஞர்கள். ஜல்லிக்கட்டுக்காவே சிறப்பு கவனிப்புடன் வளர்க்கப்படும் நாட்டு மாட்டினங்கள் அவற்றின் பிறப்பிடம் , தன்மை மற்றும் நிறத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

காங்கேயம் காளைகள் (Kangayam):

ஜல்லிக்கட்டு என்றாலே காங்கேயம் காளைகள் தான் என ஒரு தவிர்க்க முடியாத கருத்து உண்டு. இவை காங்கேயம், ஈரோடு , கோயம்புத்தூர் உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் தோன்றியவை . தமிழ்நாட்டில் நிலவும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப வாழக்கூடிய ஆற்றலைக் கொண்டவை. இவை பிறக்கும் போது சிவப்பு நிறத்திலும் , வளர வளர சாம்பல் கலந்த கருப்பு நிறத்திலும், முன்பகுதி, திமில் மற்றும் பின்னங்கால் பகுதி அடர் நிறத்திலும் மாறும். காங்கேயம் இன காளைகளில் மயிலை, பிள்ளை, செவலை மற்றும் காரி என நான்கு உட்பிரிவுகள் உள்ளன. ஜல்லிக்கட்டு போட்டிக்காக வளர்க்கப்படும் காங்கேயம் காளைகள் சுமார் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை விற்கப்படுகிறது. Paanai Pongal Recipe: பாரம்பரிய மிக்க மண்பானை பொங்கல் செய்வது எப்படி..? அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!

புலிக்குளம் காளைகள் (Pulikulam):

ஜல்லிக்கட்டிற்கு என பிரத்யேகமாக வளர்க்கப்படும் காளையினம் புலிக்குளம் காளைகள். இவை சிவகங்கை, மதுரையை சுற்றியுள்ள பகுதிகளைப் பூர்விகமாகக் கொண்டவை. புலியைத் தன் கொம்பால் குத்துக் கொன்றதால் இந்த பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது. பொதுவாக இவை கருப்பு,சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் காணப்படுகிறது.பெரிய திமிலும், கூரிய கொம்பும், சீறிப்பாயும் வீரியமும் இதன் அடையாளமாகச் சொல்லப்படுகிறது. இயல்பாகவே இவை சுறுசுறுப்பாக இருக்கும் தன்மையைப் பெற்றவை. இவை காட்டு மாடுகள், கிடை மாடுகள் மற்றும் கிழக்கித்தி மாடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. நன்கு வளர்ந்த ஜல்லிக்கட்டு மாடுகள் 5 லட்சம் வரை விலை போகிறது.

உம்பளாச்சேரி மாடு (Umbalachery):

ஜல்லிக்கட்டு போட்டிக்காக வளர்க்கப்படும் உம்பளாச்சேரி மாடுகள் தமிழ்நாட்டில் நாகை, திருவாரூர், தஞ்சை பகுதிகளில் காணப்படும் இனமாகும். இவை பிறக்கும் போது செம்பழுப்பு நிறத்தில் இருந்தாலும் பின் வளர வளர சாம்பல் நிறத்திற்கு மாறுகிறது. காங்கேயம் மாட்டின் தலை அமைப்பைத் தவிர மற்ற உடற்கூறுகளை உம்பளச்சேரி மாட்டிலும் காணலாம். இவை தெற்கத்தி மாடு, மோட்டை மாடு என்றும் அழைக்கப்படுகிறது. குட்டையாக இருந்தாலும் அதிக உறுதித் தன்மையைக் கொண்டுள்ளன. டெல்டா சதுப்பு நிலப்பகுதிகளில் உப்பு சத்து வாய்ந்த புல்வகைகளை மேய்ந்து உற்பத்தியான இந்த கால்நடைகள் உம்பளச்சேரி மாடுகள் என்றழைக்கப்படுகிறது.

மலை மாடுகள் (Malai Maadu):

தேனி மற்றும் கம்பம் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் காணப்படும் மாட்டினம். இந்த மாடுகள் மலையில் மேய்ச்சலுக்கு போவதால் மலைமாடுகள் என்றும் அழைக்கப்படுகிறது. கரும்போர், செம்போர் என நிறத்தில் உள்ளது தனிசிறப்பு. இவை ஜல்லிக்கட்டு, ரேக்ளா போட்டிகளுக்குச் சிறந்ததாக விளங்குகின்றன. புலி, சிறுத்தை, செந்நாய் , நரி போன்ற விலங்குகளை எதிர்த்து போரிடும் குணம் கொண்டவை. மலைகளில் வளர்வதால் காட்டு மாடுகளின் குணம் கொண்டு அதிக மூர்க்கதனமாக காணப்படுகின்றன. ஜல்லிக்கட்டு போட்டிகளில் அதிகம் வெற்றி பெறும் மாட்டினமாக தேனி மலைமாடுகள் இருக்கின்றன. இதன் மூன்று மாத கன்றுகளே 10 ஆயிரத்திற்கும் மேல் விலை போகிறது என்கிறார்கள். Jallikattu 2025: உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள்.. எங்கே, எப்போது நடைபெறும்? விபரம் உள்ளே.!

பர்கூர் மலை மாடுகள் (Bargur):

இவை ஈரோடு மாவட்டம் பர்கூர் மலையைத் தாயகமாகக் கொண்டவை. இவை பழுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் திட்டுக்களுடன், பெரிய திமில், குட்டையான கால்கள் மற்றும் சற்று வளைந்த கூர்மையான கொம்புகளுடன் காணப்படுகிறது. மற்ற நாட்டு மாட்டுகளை விட கூடுதலாக வறட்சியைத் தாங்கும் திறன் கொண்டவை. ஜல்லிக்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயத்திற்கு பெயர் பெற்றது. இவை கரடுமுரடான மலைக்காடுகளில் வாழ்வதால் அதிக கோபமும், முரண்பிடிக்கும் தன்மையையும் கொண்டவை. இவற்றை பழக்குவது கொஞ்சம் கடினமானது. இந்த மாடுகள் பர்கூர் செம்மறை மாடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

ஆலம்பாடி மாடுகள் (Alambadi):

இந்த இன மாடுகள் ஓகேனக்கல் சுற்று வட்டாரப்பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட காட்டு மாட்டினங்கள். இவை நீண்ட கால்கள், தடித்த கொம்புகள் மற்றும் முன்நோக்கிய நெற்றியுடன் கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் காணப்படுகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளில் இந்த காளைகள் பயன்படுத்தப்படுகின்றன. வளர்ந்த காளை மாடுகள் ₹ 35,000 வரையிலும் விற்கப்படுகிறது. இவை காவேரி மாடு, மராட்டியன் மாடு, இலம்பாடி மாடு என்றும் கர்நாடக எல்லையோரங்களில் மாதேஸ்வர பெட்டா என்றும் அழைக்கப்படுகிறது.

இவற்றைத் தவிர குட்டை மாடு, பாலமலை மாடு மற்றும் துருஞ்சல சேரி மாடுகள் உள்ளிட்ட வட்டார மாட்டினங்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக வளர்க்கப்படுகின்றன.