ஆகஸ்ட் 22, சென்னை (Chennai News): வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பெருநகரங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த டிராகன் பழங்கள் தற்போது அனைத்து பகுதிகளிலுமே கிடைக்கிறது. இதற்குக் காரணம் இங்குள்ள விவசாயிகள் டிராகன் பழங்களை சாகுபடி செய்யத் தொடங்கியிருப்பதேயாகும். இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்கம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் டிராகன் பழங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழகத்தில் தற்போது டிராகன் ஃப்ரூட் விவசாயம் பரவலாக வளர்ந்து வருகிறது இருந்தாலும் பல விவசாயிகள் டிராகன் ஃப்ரூட் சாகுபடி செய்ய தயங்குகின்றனர். இவ்வாறான நிலையில் டிராகன் ஃப்ரூட்டை கடந்த 2 வருடங்கள் விவசாயம் செய்து லாபம் ஈட்டியும் வருகிறார் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் கோபி.
டிராகன் ஃப்ரூட்: கொரோனா காலத்தில் வேலையிழப்பு ஏற்பட்டதால், விவசாயத்தில் கவனம் திரும்பின நிலையில், 8 முறை தனது நிலத்தில் போர் அமைத்தும் தண்ணீர் அளவு எதிர்பார்த்த அளவில் இல்லை. அந்த பகுதியில் இருக்கும் தண்ணீருக்கு ஏற்ற பயிரை சாகுபடி செய்ய நினைத்தும் அதேசமயம் பணப்பயிராகவும் இருக்கவேண்டும் என எண்ணியும் தேர்ந்தெடுத்த பயிர்தான் டிராகன் ஃப்ரூட் என்று கூறிகிறார் கோபி. எடுத்ததும் டிராகன் ஃப்ரூட்டில் குதிக்காமல், முதலில் இந்த பழத்தை பற்றி, ஹைதராபாத், குஜராத், கர்நாடகா ஆராய்ச்சி நிலையம் போன்ற பிற மாநிலங்களுக்கு சென்று தகவல்கள் தெரிந்து கொண்டு தான் இதில் இறங்கினோம். ஏனெனில் தமிழகத்தில் மிக குறைவான அளவே தான் டிராகன் ஃப்ரூட் பயிரிப்பட்டிருந்தது. மேலும் இதற்கான விதை செடிகளை தலா 70 ரூபாய் என ஹைதராபாதிலிருந்து வாங்கி பயிரிட்டோம் என்றார். The Hidden Details In TVK Flag: வாகை மலர் என்றால் என்ன? பயன்? எதற்கு பயன்பட்டது? வெற்றியை குறிக்கும் வாகை மலர்.. வரலாறு தெரியுமா?
டிராகன் ஃப்ரூட் சாகுபடி: விதைச் செடிகள், வேர்களுடன் 6 அங்குலத்திற்கு வளர்ந்த 3 மாத செடிகள் ஆகும். மேலும் விதை செடிகள் வாங்கிய இடத்தில், நடவு செய்த முதல் வருடத்தில் 1 டன் பழங்களும், 2ம் வருடத்தில் 8 டன் மகசூல் கிடைக்கும் என கூறினார்கள். ஆனால் அதே போல் முதல் வருடத்தில் 1 டன்னும், 2ம் வருடத்தில் கூறியதை விட ஒரு டன் அதிகமாக 9 டன்னாகவே மகசூல் கிடைத்தது. கடைசியாக கிடைத்த மகசூலில் 13 லட்சம் ஈட்டினோம்.
டிராகன் பழத்தில் பிங்க் கலரில் வரும் பழத்திலேயே 153 மேல் வெரைட்டிகள் உள்ளது எனக் கூறும் கோபி, நாங்கள் சீயாம் ரெட் சி ரகத்தையும், அமேரிக்கன் பியூட்டி ரகத்தையும் 2 ஏக்கருக்கு பயிரிட்டிருந்தோம். பழங்களின் தேவை அதிகமாக இருப்பதால் தற்போது மேலும் 2 ஏக்கருக்கு பயிரிட்டுள்ளோம். விற்பனையை பொருத்த வரையில், நேரடியாக பழங்களை வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். பழங்கள் கிலோ ரூ.130,150, 170 என மொத்தமாக விற்பனையாகிறது. எதிர்காலத்தில் விவசாயிகள் டிராகன் ஃப்ரூட்டை அதிகளவில் சாகுபடி செய்தால் விநியோகிப்பதில் சிக்கல்கள் வரலாம். ஆனால் இது பழத்தின் விலையில் நிச்சயம் நஷ்டம் ஏற்படாது.
டிராகன் ஃப்ரூட் நடவு: டிராகன் ஃப்ரூட்டை நடவு செய்ய முதலில் 7 அடியுள்ள சிமெண்ட் தூண்கள் மற்றும் வளையங்கள் தேவைப்படும். இதில் தான் டிராகன் செடி கிளைகளுடன் வளர ஏற்றதாக இருக்கும். ஒவ்வொரு தூணிற்கும் 4 செடிகள் வீதம் ஏக்கருக்கு 500 கற்களில் 2000 செடிகள் நடவு செய்ய வேண்டும். கற்களை 10 - 8 என்ற இடைவேளையில் நடவு செய்ய வேண்டும். ஊடு பயிர்கள் விளைவிக்க நினைப்பவர்கள் 10 - 10 இடைவேளியிலும் நடவு செய்யலாம். களிமண் மற்றும் தண்ணீர் தேங்காத மண்ணைத்தவிர அனைத்து மண்ணும் இந்த பயிருக்கு ஏற்றதாகும். தண்ணீர் தேங்கினால் வேரழுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. Vegetable Soup Recipe: ஒரு முறை காய்கறி சூப் இப்படி செஞ்சு பாருங்க.. எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..!
நடவு செய்த 3 மாதத்திற்கு மேல், 2 அல்லது 3 மாத இடைவேளையில் ஆட்டு மற்றும் மாட்டு உரம் செடிகளுக்கு அளிக்க வேண்டும். இதனுடன் மீன் அமிலமும் அளிக்கலாம். வருடத்திற்கு ஒரு முறை நவம்பரில், ஒரு தூணிற்கு 10 கிலோ கோழி உரத்தை அளிக்க வேண்டும். மற்றும் சொட்டு நீர் பாசன முறையில் ஒவ்வொரு தூணிற்கும் 20 லிட்டர் தண்ணீர், வாரத்திற்கு ஒருமுறை அளித்தால் போதுமானது. இந்த செடியில் பூச்சி தாகுதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதை கட்டுப்படுத்த வாரம் ஒரு முறை வேப்பெண்ணைய் தெளிக்க வேண்டும். மற்றும் காய்களுக்கு வலை மாட்டிக் கொள்ளலாம். பூஞ்சை தாக்குதலை கட்டுபடுத்தினால் போதும் காய்ப்புகள் அதிகரிக்கும்.
பிறகு, நடவு செய்ய ஆரம்பித்ததிலிருந்து 6 மாதங்களில் பூக்கள் பூக்க தொடங்கி விடும். பூக்கள் பிரம்மக்கமலம் பூ போன்று இரவில் மலர்ந்து பகலில் மூடிக்கொள்ளும். பூக்கள் வந்த 31 நாட்கள் பிறகு காய்க்க தொடங்கிவிடும். முதல் வருடத்தில் 1 டன், இரண்டாவது வருடத்தில் 8 முதல் 9 டன், அதற்கு மேற்பட்ட வருடங்களில் 15 டன்கள் தொடர்ச்சியாக கிடைக்கும். அதற்கு மேல் கிளைகளை வெட்டிவிடுவது அவசியம். எந்த அளவிற்கு முதிர்ந்த கிளைகளை வெட்டி புது கிளைகள் வளர்கிறதோ அந்த அளவிற்கு காய்ப்புகள் கிடைக்கும்.
அறுவடைப்பருவம்: இதன் அறுவடைப்பருவம் ஜூன் முதல் நவம்பர். 3 வருடங்களிற்கு மேல், ஒவ்வொரு ஆண்டும் ஏக்கருக்கு தலா 15 டன் மகசூல் கிடைக்கும். சீசனில் 25 நாட்களுக்கு ஒரு முறை என பெட்ச்களாக அறுவடை செய்ய வேண்டும். ஒரு பேட்சிற்கு ஒரு டன் அல்லது 2 டன் கிடைக்கும். 7 முறை இது போல் அறுவடை செய்யலாம். இதன் ஆயுட்காலம் 25 வருடங்களாகும். இதை நவம்பர் முதல் பிப்ரவரி நடவு செய்தால் ஜூன் ஜூலையில் அறுவடை செய்யலாம். Chettinad Tomato Kuzhambu Recipe: செட்டிநாடு ஸ்டைலில் தக்காளி குழம்பு செய்வது எப்படி..? விவரம் உள்ளே..!
இவைகளை எடுத்து பயிரிட தயங்கும் விவசாயிகள் குறைந்த அளவில் செண்ட் கணக்கில் பயிரிடலாம். இதன் சாகுபடியை உள்ளூரில் விற்பனை செய்யலாம். ஏற்றுமதி செய்ய நினைப்பவர்கள் பெரிய அளவில் பயிரிடலாம். வீட்டில் மாடித்தோட்டத்தில் இரண்டு செடிகளை கூட வளர்க்கலாம். மேலும் டிராகன் ஃப்ரூட் வேளாணை ஊக்குவிக்க அரசு தரப்பில் ஏக்கருக்கு ரூ.96,000 மானியமும் தருகிறார்கள் எனக் டிப்ஸும் கொக்டுக்கிறார் கோபி.
சியாம் ரெட் சி வெரைட்டி பழங்களில் மகசூலை அதிகமாக பார்த்த அனுபவத்தால் தற்போது இதன் விதை செடிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார். மேலும் இதனுடன் சியாம் கிரிக்கெட், அமேரிக்கன் பியூட்டி, வெரைட்டிகளும் விற்பனை செய்கிறார். மேலும் இதன் வழிமுறைகளையும் மற்ற விவசாயிகளும் வழங்கியும் வருகிறார் கோபி.