ஜனவரி 15, சென்னை (Chennai): தக்காளி, வெங்காயம், தேங்காய் ஆகியவற்றிலேயே சட்னி செய்கிறீர்களா? அப்போ பச்சை மிளகாயை வைத்து இந்த காரசாரமான சட்னியை (Green Chilli Chutney) அடுத்த முறை செய்து பாருங்கள். அதை எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.

தேவையானவை:

தேங்காய் - 2 சில்

சின்ன வெங்காயம் - 6

எண்ணெய் - தேவையான அளவு

உளுந்தம் பருப்பு - 3 ஸ்பூன்

கடலை பருப்பு - 6 ஸ்பூன்

கடுகு - 1/4 ஸ்பூன்

சீரகம் - 1/4 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 10

இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை

மல்லித்தழை - 1/4 கப்

வர மிளகாய் - 5

கறிவேப்பிலை - 10 இலை Palamedu Jallikattu: களைகட்டிய பாலமேடு ஜல்லிக்கட்டு.. வெற்றியாளர்கள் யார்? பரிசு என்ன? எத்தனை பேர் காயம்? முழு தகவல் இதோ.!

செய்முறை: முதலில் தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை தோல் உரித்துக் கொண்டு ஒன்றுக்கு இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் உளுந்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு ஆகியவை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தாக அதில் சீரகம் சேர்த்து வதக்கி விட்டு, பின் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட வேண்டும். அடுத்தாக அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கி விட வேண்டும். சின்ன வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி விட வேண்டும். அதன் பச்சை வாசனை சென்ற பிறகு பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி விட்டு, துருவிய தேங்காய் மற்றும் மல்லித்தழையை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். iQOO Neo 9 Pro: இந்தியாவில் வெளியாகும் iQOO Neo 9 Pro... சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா?.!

பின் அதில், கடுகு, உளுந்தம் பருப்பு, வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கிளறிவிட்டால் காரசாரமான பச்சை மிளகாய் சட்னி ரெடி!