ஜனவரி 12, சென்னை (Cooking Tips): உலகத்தமிழர்கள் கொண்டாடும் தைப் பொங்கல் பண்டிகை, நாளை மறுநாள் 14 ஜனவரி 2025 அன்று சிறப்பிக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் சென்று கொண்டாட வெளியூர், வெளிநாடுகளில் இருந்து பணியாற்றுவோர் பலரும் தாயகம் திரும்பி இருக்கின்றனர். தென்மாநிலங்களில் உழவுக்கும், அதற்கு ஆதாரமாய் விளங்கும் கதிரவன், பசுவுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடப்படும் திருவிழாக்களில், பொங்கல் (Pongal 2025) முக்கியத்துவம் பெறுகிறது. போகிப்பண்டிகை, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் ஆகிய பொங்கல் என அடுத்த சில நாட்கள் கலைகட்டவுள்ளன. டெல்டா மாவட்டங்களில் போகிப்பண்டிகை அன்று அம்மனுக்கு முட்டைக்குழம்பு, கருவாடு குழாமு போன்றவை வைத்து படைப்பது பாரம்பரியமாக நடந்து வருகிறது. ஆகையால், இன்று கருவாட்டுக்குழம்பு (Karuvadu Kulambu) செய்வது எப்படி என தெரிந்துகொள்ளலாம். Nethili Karuvadu: மனமனக்கும் நெத்திலி கருவாடு.. நன்மைகள்-தீமைகள் என்ன?.. அசத்தல் டிப்ஸ் இதோ.!
நெத்திலி கருவாடு (Nethili Karuvadu Kulambu) குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
நெத்திலி கருவாடு - 150 கிராம்,
கத்தரிக்காய் - 1/4 கிலோ,
முருங்கைக்காய் - 1,
வாழைக்காய் - 1,
பச்சை மிளகாய் - 3,
தக்காளி நறுக்கியது – 2,
குழம்பு மசால் - தேவையான அளவு,
வெங்காயம் - 3 (சிறிய வெங்காயமாக இருந்தால் 100 - 150 கிராம்)
புளி - எலுமிச்சை அளவு,
வெந்தயம் - 1 கரண்டி,
கடுகு - 1 கரண்டி,
மிளகு - 1 கரண்டி,
கறிவேப்பில்லை - சிறிதளவு,
எண்ணெய் & உப்பு - தேவையான அளவு.
கருவாடு குழம்பு மசாலா:
சிறிய வெங்காயம் - 150 கிராம்,
மல்லித்தூள் - 50 கிராம்,
சீரகம் - 1 கரண்டி,
மிளகு - 2 கரண்டி,
காய்ந்த மிளகாய் - 3,
பூண்டு பற்கள் - 15,
கறிவேப்பில்லை - சிறிதளவு,
தேங்காய் - கால் முறி.
செய்முறை:
நெத்திலி கருவாட்டை சாதாரண நீரில் அல்லது இதமான சூடுள்ள நீரில் சேர்த்து 5 முதல் 10 நிமிடம் வரை ஊறவைக்க வேண்டும். பின் இதனை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். கருவாடின் தலையுடன் குடல் பகுதியையும் நீக்கி சுத்தம் செய்த பின்னர், 3 முதல் 4 முறை நன்கு அலசி எடுக்க வேண்டும். இதனால் கருவாட்டில் இருக்கும் மணல் நீங்கும். Pongal 2025: தித்திக்கும் தைப்பொங்கல், களைகட்டும் மாட்டுப்பொங்கல், பாசத்துடன் காணும் பொங்கல்... வாழ்த்துச் செய்தி இதோ..!
இறுதியாக சிறிதளவு கல் உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்தால், எஞ்சிய மணலும் வெளியே வந்துவிடும். கருவாடின் குடல் பகுதியை சரிவர நீக்கம் செய்யாமல் சமைத்தால் உணவு கசப்புத்தன்மை அடையும் என்பதால் கவனம் வேண்டும்.
பின் எடுத்துக்கொண்ட கத்தரி, முருங்கை, தக்காளி, வாழை, பச்சை மிளகாய் அவற்றை நறுக்கிக்கொள்ள வேண்டும். புளிக்கரைசலை தயார் செய்து எடுத்துக்கொள்ளவும்.
வாணெலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு, மிளகு, சீரகம், கறிவேப்பில்லை, மல்லித்தூள் ஆகியவற்றை சேர்த்து லேசாக வதக்கி, மசாலாவை அரைத்து எடுத்துவைக்கவும்.
பின் அதே வாணெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சிறிதளவு சீரகம், கறிவேப்பில்லை, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இவை லேசாக வதங்கியதும் வெங்காயம் - தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் & தக்காளி லேசான பொன்னிறம் அடைந்ததும், காய்கறிகளை சேர்த்து வதக்க வேண்டும். காய்கறிகள் சேர்த்த பின்னர் சிறிதளவு தூள் உப்பை தூவி வதக்கவும்.
காய்கறிகள் எண்ணெயில் வாதங்கத்தொடங்கியபின், அதனுடன் அரைத்து வைத்துள்ள மசால், சிறிதளவு குழம்பு மசால் சேர்த்து வதக்கி, மசாலா வாசனை போனதும் புளியை சேர்த்துக்கொள்ளவும். புளியுடன் தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்கவிடவும். உப்பு - காரம் அளவினை சோதித்துக்கொள்ளவும். முடிந்தளவு கட்டியாக வைக்க முயற்சகவும். கருவாடு குழம்பு கட்டுப்பட இருந்தால் சுவையாக இருக்கும்.
காய்கறிகள் 75% வெந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து கருவாடு சேர்த்துக்கொள்ளவும். மிதமான தீயில் கருவாடு 5 முதல் 10 நிமிடங்கள் வெந்ததும், இறுதியாக சில கறிவேப்பிலை இலைகளை வெட்டி சேர்த்தால் சுவையான நெத்திலி கருவாடு குழம்பு தயார்.