மார்ச் 22, புதுடெல்லி (New Delhi): வஞ்சிரம் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருக்கிறது. இது, உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத் துடிப்பைச் சீராக்கும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மீன் உணவு சாப்பிட வேண்டியது அவசியம். இப்படிபட்ட வஞ்சிரம் மீனில் வறுவல் (Fish Fry) எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!
தேவையான பொருட்கள்:
வஞ்சரம் மீன் - 4
மிளகாய் தூள் - காரத்திற்கு ஏற்ப
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - அரை பழச்சாறு
தனியா தூள்: 2 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன் Inimel Teaser: ஸ்ருதி ஹாசனுடன் ஓவர் ரொமான்ஸ் செய்த லோகி.. "உனக்காடா ரொமான்ஸ் வராதுன்னு சொன்ன.." என கலாய்க்கும் நெட்டிசன்கள்..!
செய்முறை: மீனை கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு, எலுமிச்சை சாறு, எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு மசாலா கலவையை மீன் துண்டுகளில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் ஊற வாய்த்த மீனை கல்லில் எண்ணெய் ஊற்றி மீன் வைத்து வேகவைத்து எடுத்தால் சுவையான வஞ்சரம் மீன் வறுவல் ரெடி!