Template: Night Shift Working

டிசம்பர், 8: நவநாகரீக காலத்தில் வாழ்ந்து வரும் நாம் 24X7 என்ற முறையில் கடுமையான உழைப்பை தினமும் வெளிப்படுத்த வேண்டியுள்ளது. ஒவ்வொரு விசயத்திற்கும் நாம் போராடி வருகிறோம். வேலைப்பளு என்பது நம்மிடையே சமீபகாலமாக அதிகரித்துவிட்ட நிலையில், காலை & மதிய நேர வேலைகள் கடந்து இரவு நேர வேலைகள் (Night Shift) வாடிக்கையாகி வருகிறது.

தனிநபர் இரவு நேரத்தில் சுழற்சி முறையில் பணியாற்றினால் குறைந்தளவு பிரச்சனையை சந்திக்கிறார் என்றால், சில நிறுவனங்கள் ஆண்டுக்கணக்கில் இரவுநேர பணியை வழங்குகிறது. அவர்களின் உடல் இயல்பான நிலைக்கு எதிராக செயல்பட்டு இரவு நேர பணியில் ஈடுபடுவதால் உடலியல் சவால்களும் அவர்களும் எதிராக மாறுகிறது.

கேடான உணவுகளை ஒதுக்கவும்: இதனால் மன அழுத்தம், எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனையையும் சந்திக்கின்றனர். இவ்வாறான பணிகளில் ஈடுபடுவர்களுக்கு என சிறப்பு உணவுத்திட்டம் இருக்கிறது. நாம் ஆரோக்கியத்துடன் இருக்க சிறந்த உணவுப்பழக்கவழக்கம் என்பது அவசியம் ஆகும். கடைகளில் விற்பனை செய்யப்படும் தின்பண்டம், உடலுக்கு கேடான குளிர்பானங்கள், காபி போன்றவற்றை சாப்பிடுவது இரவு நேர பணியாளர்களுக்கு விருப்பமானது. இவை அனைத்தும் உடலின் செயல்பாடுகளை கேடாக மாற்றும்.

தேநீர்-காபி கூடாது: உப்பு மற்றும் சர்க்கரை என இரண்டும் உடலுக்கு தீமையான ஒன்றாகும். அதிகளவிலான சர்க்கரை பல ஆண்டுகளுக்கு உடல்நல பிரச்சனையை ஏற்படுத்தும். இரவு நேரத்தில் வேலைபார்க்கும் பணியாளர்கள் இனிப்பு அதிகமான தேநீர், காபி போன்றவற்றை அதிகளவு எடுத்துக்கொள்கிறார்கள். இதில் சேர்க்கப்ட்டுள்ளாள் வெள்ளை சர்க்கரை இரத்தத்தின் சர்க்கரை அளவை மாற்றி பாதகமான விஷயங்களை ஏற்படுத்துகிறது. Menstrual Cup Use: மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு வரமாக Menstrual Cup… உபயோகம் செய்யும் வழிமுறைகள் எப்படி?.. தெரிஞ்சுக்கலாம் வாங்க.! 

புரதசத்து உணவுகள்: இரவு நேர பணியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழப்பதால், சரியான உனவுகளை தேர்வு செய்யும் விஷயங்களில் தடுமாறுகின்றனர். ஆதலால் முட்டை, நட்ஸ், பாலாடைக்கட்டி, வேர்க்கடலை போன்ற புரதசத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். காபி மற்றும் தேநீரில் இருக்கும் காஃபைன் பொருள் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் காபி, தேநீர் அருந்தும் செயலை குறைக்க வேண்டும். இதனை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ள கூடாது. அதற்கு பதில் பழங்கள், நட்ஸ் போன்றவற்றை சாப்பிடலாம்.

தின்பண்டங்கள் வேண்டாம்: ஆரோக்கியம் இல்லாத சிற்றுண்டி, தின்பண்டங்களை கட்டாயம் இரவுநேர பணியாளர்கள் தவிர்க்க வேண்டும். இவ்வாறான பழக்கத்தை கொண்டவர்கள் உடல் எடை அதிகரித்து காணப்படுவார்கள். இரவுநேர சலிப்பை தவிர்க்க வேண்டும் என் அவர்கள் சாப்பிடும் சிற்றுண்டி ஆரோக்கியமற்ற பொருட்களால் உருவானது என்பதால் உடலில் வெறுமையான கலோரிகள் குவிந்து உடல் எடை அதிகரிக்கப்படுகிறது.

அளவே மருந்து: இரவு நேரத்தில் எப்போதும் வேலையை தொடங்குவதற்கு முன்னதாக இரவு உணவை சாப்பிட்டுவிட வேண்டும். இச்செயல் திறம்பட வேலையினை செய்யும் ஆற்றலை வழங்கும். முடிந்தளவு வீட்டில் தயார் செய்யப்படும் சூடான உணவினை எடுத்து செல்ல வேண்டும். அதிக உணவு எப்போதும் உறக்கத்தை ஏற்படுத்தும். இதனால் இரவுப்பணியின் போது குறைந்த அளவிலான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இரவுநேர பணியை முடித்துவிட்டு உறங்கச்செல்லும் முன்னர் குறைந்தளவு உணவினை எடுத்துக்கொண்டு உறங்கலாம். இரவு நேரத்தில் உடல் இயற்கையாக செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உள்ளாகும். இதனால் எளிமையான உணவுகளையே சாப்பிட வேண்டும். குளிர்பானத்திற்கு பதிலாக நீர் குடிக்க வேண்டும். அதிகாலையில் 4 மணியின் போது உடல் சோர்வு, தூக்கம் ஏற்படும் என்பதால் அந்நேரத்தில் ஆரோக்கிய உணவுகளை சாப்பிட வேண்டும்.

சமைத்த புதிய உணவுகளே சிறந்தது: எந்த சூழ்நிலையிலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ள கூடாது. சமைத்த புதிய உணவுகளே உடல் நலத்திற்கு நல்லது. தூக்கத்தில் ஏற்படும் பாதிப்பினை குறைக்க உறங்குவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்பு காபி, ஆல்கஹால், தேநீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதனைப்போல, எந்த சூழ்நிலையிலும் பசியுடன் தூங்க செல்ல கூடாது. இரவுநேர வேலை மற்றும் பசியுடன் கொண்ட தூக்கம் உடலின் சமநிலையை குறைக்கும் காரணியாகும்.

ஆரோக்கிய உணவுகள்: காய்கறியுடன் ரொட்டியை சாப்பிடுதல், பழங்கள் மற்றும் காய்கறியை சாப்பிடுதல், பழச்சாறுகளை குடித்தல், பால் குடித்தல், வேகவைத்த முட்டை சாப்பிடுவது, வாரம் ஒருமுறை ஆடு, மீன் இறைச்சி சாப்பிடுதல், வேலை முடிந்த பின்னர் நல்ல உறக்கம் போன்றவற்றை கட்டாயம் மேற்கொண்டால் இரவுநேர பணியாளர்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகள் குறையும். இதனை தவிர்த்து நாம் செய்யும் அனைத்து மாற்றமும் எதிர்மறை செயல்பாடுகளை ஏற்படுத்தும்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 8, 2022 12:40 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).