அக்டோபர் 22, சென்னை (Health Tips): இன்றளவில் பல்வேறு தொடர் பணிகள் காரணமாக நாம் அயராது உழைக்கும் சூழலுக்கு மாற்றப்பட்டு விட்டோம். தொடர்ந்து உடலை வருத்திக்கொண்டு நாம் உழைப்பதால், நமது உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
உடலில் இருக்கும் சத்துக்களும் குறைகின்றன. இதனை சரி செய்ய அவ்வப்போது நாம் சத்துள்ள காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது. இன்று சப்போட்டா பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம். சப்போட்டாவில் அளவில்லாத ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இது நம்மை பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. பொட்டாசியம் உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவி செய்யும். இரத்த அழுத்தத்தை சீராக்கும். இதனை தினமும் சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீராகி, சமநிலை ஏற்படும். Trending Video: அதிகமாக சாப்பிட்டு தப்பி செல்ல இயலாமல் அல்லோல்பட்ட மலைப்பாம்பு; அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
சப்போட்டாவில் இருக்கும் ஆன்டிபயாடிக், ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் பருவ கால நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கும். சப்போட்டாவை சாப்பிடுவது சிறுநீரக கோளாறுகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். சிறுநீரக கல் தொடர்பான பிரச்சனையையும் சரி செய்யும்.
உடம்புக்கு மிக அவசியமான இரும்புச்சத்து கொண்டுள்ள சப்போட்டா, உடல் நலம்-மனநலத்தை பாதுகாக்கிறது. நீர்ச்சத்து குறையும் பிரச்சனை உடையோர் சப்போட்டாவை சாப்பிடுவது உடலுக்கு ஆற்றலை வழங்க உதவி செய்யும்.
சப்போட்டா பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பட்சத்தில், தொண்டை பகுதியில் அரிப்பு, வாயில் புண் போன்றவை சிலருக்கு ஏற்படலாம். அதேபோல, நன்கு பழுக்காத சப்போட்டாவை சாப்பிடக்கூடாது. இதனால் செரிமான குறைபாடு, வயிற்றுப்போக்கு போன்றவையும் ஏற்படும்.