அக்டோபர் 22, வைரல் (Socially): உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பாம்பு வகைகள் இருக்கின்றன. இவற்றில் விஷமுள்ள பாம்பு வகைகள், விஷம் இல்லாத பாம்பு வகைகள் உட்பட பல வகைப்படுத்தப்பட்டுள்ளன. பாம்புகள் பொதுவாக தவளை, எலி போன்ற உணவுகளை சாப்பிடும். மலைப்பகுதியில் காணப்படும் மலைப்பாம்பு தனது உருவத்திற்கு ஏற்ப பெரிய அளவிலான ஆடு, கோழி போன்றவற்றையும் சாப்பிடக் கூடியவை. இந்நிலையில், இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்த் ஷர்மா பதிவிட்டுள்ள வீடியோவில், "மலைப்பாம்பு ஒன்று தனது உணவை எடுத்துக் கொண்ட நிலையில், அங்கு மக்கள் வருவதை அறிந்து அது தப்பிச்செல்ல முயற்சித்தது. ஆனால், அது அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிட்டதால், அங்கிருந்து தப்பிச் செல்ல இயலாமல் அங்கேயே சிக்கிக் கொண்டது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. Leo Collection: லியோ திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் இவ்வுளவு கோடியா?.. மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்.!
Caught in the trap after a happy meal 😔 pic.twitter.com/f9lITMILaX
— Susanta Nanda (@susantananda3) October 20, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)