Exercise (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 05, சென்னை (Health Tips): உடலுக்குள் நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான ரத்த செல்களையும் ஆன்ட்டிபாடிகளையும் உருவாக்குவதில் எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சாதாரண வாக்கிங், ஜாகிங் போன்றவையே எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளப் போதுமானவை. கொஞ்சமாவது உடற்பயிற்சி (Exercise) இருந்தால்தான் நம் அசைவுகளுக்கு அவசியமான சைனோவியல் திரவமானது மூட்டுகளில் சுரக்கும். உடற்பயிற்சி செய்யும்போது நம் இதயத்துடிப்பு அதிகமாகும். நிறைய ரத்தம் பம்ப் செய்யப்படும். ரத்தத்தில் ஆக்சிஜன் சப்ளை அதிகரிக்கும். Shruti Haasan To Star In Indo-UK Movie: "அட நம்ப ஆண்டவர் பொண்ணாச்சே.. சும்மாவாப்பா.." எகிறும் சென்னை ஸ்டோரி ஹைப்..!

உடற்பயிற்சி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

  • எந்தப் பகுதிக்கு உடற்பயிற்சி செய்யும் முன்பும், வார்ம் -அப் பயிற்சிகள் அவசியம். இதனால் சுளுக்கு, தசைப்பிடிப்பு போன்றவை தவிர்க்கப்படும்.
  • உடற்பயிற்சிகளை முடிக்கும்போது திடீரென நிறுத்தக்கூடாது. மெள்ளமெள்ளக் குறைத்து நிறுத்த வேண்டும்.
  • உங்கள் உடல் ஒத்துழைக்கிற அளவுக்கான பயிற்சிகளை மட்டும் செய்யவும்.
  • கன்னாபின்னாவென உடலைத் திருப்புவது, முறுக்குவது போன்றவை வேண்டாம்.
  • உடற்பயிற்சிகள் செய்கிறவர்கள் நிறைய தண்ணீரும், பழங்கள் மற்றும் பழச்சாறுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • உடற்பயிற்சி செய்கிறபோது சரியான ஷூக்களை அணிந்துகொள்ள வேண்டும்.