ஏப்ரல் 19, புதுடெல்லி (New Delhi): கல்லீரல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே கல்லீரல் தினத்தின் (World Liver Day) நோக்கமாகும். நாம் சாப்பிடும் புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவற்றின் செரிமானம் நடைபெறுகிற ஒரே இடம் நமது கல்லீரல் மட்டுமே. சிறுநீரகம் உடலில் தேவையில்லாத கழிவுகளை சிறுநீராக வெளியேற்றுவதை போல தேவையில்லாத கழிவுகளை பித்தநீரின் மூலம் கல்லீரல் வெளியேற்றுகிறது.

கல்லீரலின் முக்கியத்துவம்: கல்லீரலை ஆரோக்கியமாக வைத்து கொண்டால் பிற உறுப்புகளும் நல்லபடியாக வேலை செய்யும். கல்லீரல் முற்றிலுமாக பழுதடைந்தால், சிறுநீரக பாதிப்பும் ஏற்படும். அதாவது சிறுநீர் கழிப்பதில் பிரச்னை ஏற்படும். ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும். கல்லீரல் பாதிப்படைந்தவர்களால் நான்கு அடிக்கூட இயல்பாக நடக்க முடியாது. மூச்சு வாங்கும். இயல்பாக யோசிக்க முடியாது. தூக்கம் வராது. ஆய்வுகளைப் பொறுத்தவரையில், 20 லட்சம் பேர், கல்லீரல் நோய்களால் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பலியாகிறார்கள். India National Elections 2024 Google Doodle: 'ஒருவிரல் புரட்சியே' 2024 இந்தியா தேர்தல்கள்; கூகுள் வெளியிட்ட அசத்தல் டூடுள்..!

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள அதீத புரத உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும். அதேபோல நடைபயிற்சி மிக அவசியம். உடற்பயிற்சிகளை செய்வது மற்றும் மதுவை தவிர்ப்பது மற்றும் புகையிலையை கைவிடுவது ஆகியவை, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நாம் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்கள் ஆகும்.