ஜனவரி 18, திருவையாறு (Thanjavur News): தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு, தியாகராஜ சுவாமி (Thiruvaiyar Thyagaraja Swamy Temple) கோவிலில், இன்று 178 வது தியாகராஜ சுவாமி ஆராதனை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இடங்களில் வெகுவிமரிசையாக சிறப்பிக்கப்படும் தியாகராஜா ஆராதனை, திருவையாறில் மிகப்பிரம்மாண்டமான வகையில் நடைபெறும். தியாகராஜர் ஆராதனை (Thyagaraja Swamy Aradhana) நாளில் இசைக்கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டு ஆராதனையை சிறப்பிப்பார்கள். Sankashti Chaturthi 2025: மகா சங்கடஹர சதுர்த்தி.. வழிபாடு செய்ய வேண்டியது ஏன்?!
இசையை ஒருங்கிணைந்தவர்:
கடந்த 18ம் நூற்றாண்டில் துறவியாகவும், சிறந்த இசைக்கலைஞராகவும் இருந்து வந்த தியாகராஜ சுவாமி, இந்திய பாரம்பரிய இசைகளை ஒன்றிணைக்கவும், உருவாக்கவும் மிகப்பெரிய காரணமாக இருந்தார். இதனால் அவரின் செயலை பாராட்டி, தொடர்ந்து அதனை கடைபிடிக்க தியாகராஜ சுவாமி ஆராதனை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. தியாகராஜருக்கு ஞானம் கிடைத்த திருத்தலமாக கருதப்படும் தஞ்சாவூர், திருவையாறு கோவிலில் ஆராதனை நடைபெறும். அப்போது, தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனை இசைக்கப்படும்.
தியாகராஜர் ஆராதனை இன்று:
2025ம் ஆண்டுக்கான தியாகராஜ ஆராதனை 18 ஜனவரி 2025 இன்று நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் புஷ்பா பஹல பஞ்சமி நாளில் நடத்தப்படும் தியாகராஜ ஆராதனையில், தேசிய அளவில் பல மாநிலங்களைச் சேர்ந்த இசைக்கலைஞர்களை பங்கேற்று நிகழ்ச்சியை சிறப்பிப்பார்கள். 1847 வாக்கில் தியாகராஜரின் மறைவுக்கு பின்னர் அவரது சீடர்களும், 1903 ம் ஆண்டுக்கு பின் இசைக்கலைஞர்களும் தங்களின் நன்றியை செலுத்தும் விதமாக திருவையாறில் தியாகராஜர் ஆராதனை செய்து வந்துள்ளனர். தியாகராஜர் பாராயணத்திற்கு பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கி நிகழ்ச்சி முடித்துக்கொள்ளப்படும். தியாகராஜரின் ஆசியை பெற்ற மகிழ்ச்சியில், இசைக்கலைஞர்கள் தங்களின் அடுத்தகட்ட பயணத்தை தொடருகின்றனர்.
இன்று நடைபெறும் இசைச்சேரி உட்பட நிகழ்ச்சி நிரலை முழுமையாக தெரிந்துகொள்ள https://thiruvaiyaruthyagarajaaradhana.org/admin/uploads/download/Tamil%20Book%202025.pdf இங்கு அழுத்தவும்.
2025ம் ஆண்டின் தியாகராஜ ஆராதனை:
தியாகராஜர் ஆராதனை: